பேச்சுப் போட்டியில் வென்ற மாணவர்களுக்குப் பரிசு வழங்கிப் பாராட்டிய எஸ்.பி.!

Saturday 23, May 2020, 01:16:07

கொரோனாவுக்கு எதிரான ஊரடங்கு நாட்களில் வீட்டில் இருக்கும் நேரத்தை எப்படி பயனுள்ளதாக கழிப்பது? என்பது குறித்து மாணவ-மாணவிகளுக்கான பேச்சு போட்டி திருச்சி சரக காவல்துறை சார்பில் திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கடந்த 16-ம் தேதி நடத்தப்பட்டது.

இதில், 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை உள்ள மாணவ-மாணவிகள் ஜூனியர் பிரிவிலும், 11-ம் வகுப்புக்கு மேல் உள்ள மாணவ-மாணவிகள் சீனியர் பிரிவிலும் கலந்து கொண்டனர்.

காணொலி காட்சி மூலம் நடந்த இந்த பேச்சு போட்டியில் திருச்சி மாவட்டத்தில் முசிறி, லால்குடி, மணப்பாறை, திருவெறும்பூர், ஜீயபுரம் ஆகிய உட்கோட்டங்களில் இருந்து 80-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். பேச்சு போட்டியில் வெற்றி பெற்றவர்களை தேர்வு செய்ய நடுவர்களும் நியமிக்கப்பட்டு இருந்தனர்.

இதில் மணப்பாறை பகுதியை சேர்ந்தவர்களே ஜூனியர் மற்றும் சீனியர் பிரிவில் முதலிடத்தை பிடித்தனர். அவர்களை மாவட்ட காவல்துறை சூப்பிரண்டண்ட் ஜியாவுல் ஹக் பாராட்டி பரிசுகள் வழங்கினார்.

இதற்கான நிகழ்ச்சி திருச்சி சுப்பிரமணியபுரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. திருச்சி, முசிறி, லால்குடி, திருவெறும்பூர், மணப்பாறை, ஜீயபுரம் காவல் கோட்டங்களை உள்ளடக்கிய போட்டிகளில் மணப்பாறை மகுடம் சூடியது.

stud

ஜூனியர் பிரிவில் மணப்பாறை லெட்சுமி மெட்ரிகுலேசன் பள்ளியை சேர்ந்த தீபிகா முதலிடத்தையும், சென்னை அமிர்தா வித்யாலயா பள்ளி மாணவி பவித்ரா இரண்டாம் இடத்தையும், திருச்சி பெல் ஆண்கள் உயர்நிலைப்பள்ளி மாணவர் வைத்தீஸ்வரன், ரெட்டை வாய்க்கால் அமிர்தா வித்யாலயா பள்ளி மாணவி அக்‌ஷயா ஆகியோரும் அடுத்தடுத்து பரிசுகளை தட்டிச்சென்றனர்.

சீனியர் பிரிவில் மணப்பாறை அரசு உயர்நிலைப்பள்ளி மாணவன் பிரவீன் முதலிடத்தையும், திருச்சி பெல் ஆர்.எஸ்.கே. பள்ளி மாணவர் சபா சல்சாபில் 2-ம் இடத்தையும், இந்திரா கணேசன் கல்லூரி மாணவி சீத்தல் 3-ம் இடத்தையும், கே.கே.நகர் எஸ்.பி.ஐ.ஒ.பள்ளி மாணவி சுப்புலெட்சுமி 4-ம் இடத்தையும் பிடித்து வெற்றி பெற்றனர்.

இவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி திருச்சி சுப்பிரமணியபுரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டி பேசினார்.

நிகழ்ச்சியில் மணப்பாறை காவல் நிலைய ஆய்வாளர் கண்ணதாசன், காவல் ஆய்வாளர் அஜீம் மற்றும் காவல்துறையை சேர்ந்தவர்களும், பள்ளி மாணவ-மாணவிகளின் பெற்றோர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

© Copyright 2020 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz