10வயது சிறுமியிடம் தகாத முறையில் நடந்து கொலை செய்த கொடூரர்கள் மூவருக்குத் தூக்கு தண்டனை

Thursday 04, October 2018, 18:54:19

தேனி அருகே 10வயது சிறுமியை கூட்டாகபலாத்காரம் செய்து கொலை புரிந்த வழக்கில் குற்றவாளிகள் மூவருக்குத் தூக்கு தண்டனை விதித்து தேனி மாவட்ட மகிளா நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.

தேனி மாவட்டம் ஓடைப்பட்டி அருகே உள்ள காமாட்சிபுரத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து அவரைக் கொடூரமாகக் கொலை செய்த வழக்கில் குற்றவாளிகளான காமாட்சிபுரத்தை சேர்ந்த சுந்தர்ராஜ், ரூபின் என்ற ரவி குமரேசன்  ஆகிய மூவரை கைது செய்த போலீசார் மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

அவர்கள் மீது கடந்த இரண்டு வருடங்களாக  நடைபெற்று வந்த இந்த வழக்கின் தீர்ப்பு இன்று தேனி மாவட்ட மகிளா நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்புக்கு வந்தது.

வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மூவருக்கும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக ஒரு ஆயுள் தண்டனையும் 50ஆயிரம் ரூபாய் அபராதமும், கொலை செய்த குற்றத்திற்குத் தூக்குத் தண்டனையும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. அத்துடன் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோருக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள மகிளா நீதிமன்ற நீதிபதி திலகம் தீர்ப்பு வழங்கினார்.

© Copyright 2020 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz