சங்கர் ஐஏஎஸ் அகடாமி நிறுவனர் சங்கர் தற்கொலை

Friday 12, October 2018, 11:22:48

சென்னை அண்ணாநகரில் இயங்கிவரும் புகழ்பெற்ற சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமி இந்திய ஆட்சிப் பணித் தேர்வை எழுத மாணவர்களுக்குப் பயிசியளித்து வருகிறது. சென்னையில் மட்டுமல்லாது மதுரை, சேலம், திருவனத்தபுரம், பெங்களூரு உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இதன் கிளைகள் இயங்கி வருகின்றன.

சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமியின் நிறுவனரான சங்கரன் சென்னை மயிலாப்பூர் பகுதியில் உள்ள கிருஷ்ணசாமி அவின்யுவில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார். தன மனைவி வைஷ்ணவியுடன் கொண்ட கருத்து வேறுபாடு காரணமாக  சங்கரன், நேற்றிரவு தூக்கு மாட்டிக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.

நேற்றிரவு சுமார் பத்தரை மணி அளவில் சென்னை மயிலாப்பூரில் உள்ள தனது வீட்டில் தன்னுடைய அறையில் உள்ள மின்விசிறியில் பெட்சீட்டால் சங்கரன் தூக்கு மாட்டிக் கொண்டுள்ளார். இது தெரிய வந்தவுடன் தூக்கில்  இருந்து அவரைக் கீழிறக்கி,  இசபெல்லா மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர். அங்கு அவரைச் சோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்

குடும்பப் பிரச்னை காரணமாகத் தற்கொலை செய்து கொண்டாதாகக் கூறப்படும் சங்கரனுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்; 45 வயதே ஆன சங்கரன் தன் திறமை மூலம் உயர்ந்த நிலைக்கு வந்தவர். மாணவர்களிடம் பரிவுடன் பேசும் இயல்புடையவர்; தமிழக மாணவர்கள் பலருக்கு ஐ.ஏ.எஸ் கனவு நனவாக பாடுபட்டவர். சமூகநீதிக்காக அயராது குரல் கொடுத்து வந்த சங்கரனின் திடீர் மறைவு தமிழக இளைஞர்கள், மற்றும் மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.

© Copyright 2020 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz