தமிழக பாஜக சட்டமன்ற வேட்பாளர்கள் அறிவிப்பு! சேப்பாக்கத்தில் நடிகை குஷ்பு; ராஜபாளையத்தில் நடிகை கவுதமி!

Saturday 06, March 2021, 16:01:19

தமிழக சட்டப்பேரவைக்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கலுக்கு இன்னும் 6 நாட்களே உள்ளன. இதனால் அரசியல் கட்சிகள் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கீடு செய்யும் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளன.

அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாஜக 60 சீட்டுகளை முதலில் கோரியது. ஆனால் அதிமுகவோ 15 தொகுதிகளை பாஜகவுக்கு ஒதுக்குவதாகக் கூறியது.

ஆனால் தொடர்ந்து நடத்திய பேச்சு வார்த்தைகளில் நீண்ட இழுபறிக்குப் பின்னர் பாஜகவுக்கு 20 சீட்டுகளை ஒதுக்குவதாகக் கூறியதை அக் கட்சியும் ஏற்றுக் கொண்டுவிட இரு கட்சிகளுக்கிடையே தேர்தல் கூட்டணி உடன்படிக்கைக் கையெழுத்தானது.

தாங்கள் போட்டியிடும் 20 தொகுதிக்களுக்கான வேட்பாளர்களை இன்று தமிழக பாஜக அறிவித்துள்ளது.

தமிழகத்தில் பாஜக போட்டியிடும் 20 தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள் பட்டியல் வருமாறு

1.மயிலாப்பூர் - K.T.ராகவன்

2.காரைக்குடி - H.ராஜா

3.சேப்பாக்கம் – குஷ்பு

4.வேளச்சேரி - டால்பின் ஸ்ரீதர்

5.காஞ்சிபுரம் - கேசவன்

6.திருத்தணி - சக்கரவர்த்தி

7.பழனி - கார்வேந்தன்

8.சிதம்பரம் -     ஏழுமலை

9.கிணத்துக்கடவு -  அண்ணாமலை IPS

10.கோவை தெற்கு -  வானதி சீனிவாசன்

11.நாமக்கல் ராசிபுரம் - L.முருகன், மாநில பாஜக தலைவர்

12.ஆத்தூர் -   வி.பி.துரைசாமி மகன் Dr.பிரேம்

13.திருவாரூர் - கருப்பு முருகானந்தம்

14.திருவண்ணாமலை - தணிகைவேல்

15.வேலூர் - கார்த்தியாயினி

16.ஒசூர் - நரேந்திரன்

17.தூத்துக்குடி - சிவ முருக ஆதித்தன்

18.நெல்லை - நயினார் நாகேந்திரன்

19.ராஜபாளையம் - நடிகை கவுதமி

20.துறைமுகம் - வினோஜ் பி.செல்வம்

 

 

© Copyright 2021 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz