சிங்கப்பூரிலும் களைகட்டிய Black Friday!

Friday 23, November 2018, 19:40:14

அமெரிக்காவில் பலர் ஆவலோடு எதிர்பார்க்கும் நாட்களில் ஒன்றான Black Friday, சிங்கப்பூரிலும் களைகட்டியுள்ளது.

வழக்கமாக இந்த தினத்தில் அமெரிக்காவின் பல கடைகளில் பெரிய தள்ளுபடிகள் அளிக்கப்படுவதால் வாடிக்கையாளர்கள் திரளாகக் கடைகளுக்குச் செல்வர்.

Thanksgiving எனப்படும் நன்றி தெரிவிக்கும் தினத்தையொட்டி அந்நிகழ்ச்சி இடம்பெறுகிறது.

இந்த ஆண்டு நவம்பர் 23ஆம் தேதியான இன்றைய தினம் Black Friday அனுசரிக்கப்படுகிறது.

கடைகளுக்குள் முதலில் நுழைய வாடிக்கையாளர்கள் போட்டி போட்டுக்கொண்டு வரிசையில் நிற்பர். சிலர், ஒரு நாளுக்கு முன்னரே கடைகளுக்குச் சென்றுவிடுவர்.

Black Friday மோகம் சிங்கப்பூர்க் கடைகளுக்கும் வந்துவிட்டது.

ஆர்ச்சர்ட் ரோட்டில் அமைந்துள்ள Robinsons கடைத்தொகுதியில் இன்று Black Friday 24 மணி நேரத்திற்குத் தொடரும்.

நேற்று நள்ளிரவில் கடை திறக்கப்பப்பட்டது. கடைக்குள் செல்ல நேற்றிலிருந்தே வாடிக்கையாளர்கள் வரிசையில் நிற்கத் தொடங்கினர்.

© Copyright 2021 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz