விவசாயிகளின் நியாயமான கோரிக்கையை அரசு நிறைவேற்ற நாங்களும் வலியுறுத்துவோம் – கமல்ஹாசன் பேட்டி

Sunday 02, December 2018, 21:45:05

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாய சங்கத்தினருடன் மக்கள்  நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் சந்தித்து பேசினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் நாடு தழுவிய விவசாயிகளின் கோரிக்கையான கடன் தள்ளுபடி மற்றும் நியாயமான விலை இது இரண்டும் நியாயமான ஒன்று அதனை நிறைவேற்ற அரசு நடவடிக்கை நாங்களும் வலியுறுத்துவோம்.

எதிர்கட்சிகளின் குரலாக பார்க்காமல் மக்களின் குரலாக பார்க்க வேண்டும் என்றும் இது விவாதம் செய்வதற்கான நேரம் இல்லை, நிறைய கிரமாங்களுக்கு நிவாரணங்கள் செல்லவில்லை அரசு அதிகாரிகளும் இன்னும் செல்லவில்லை.

இதில் யாரும் அரசியல் செய்யவில்லை பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என தான் கூறுகிறோம் இதனை விமர்சனமாக எடுத்துக் கொள்ளக் கூடாது.

மத்திய அரசு அறிவித்துள்ள இடைக்கால நிவாரணத் தொகைக்கு நன்றி. இதோடு நிறுத்துவிடமால் வேகமாக செயல்படவேண்டும். கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கடன் தள்ளுபடி தவிர வேறு வழியில்லை அவர்களின் வாழ்வாதாரத்தை மீட்க இன்னும் ஏழு வருடங்கள் ஆகும் என அவர் தெரிவித்தார்.

 

 

 

 

© Copyright 2020 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz