மலேஷியா நால்வர் மன்றம் ஏற்பாட்டில் நடந்த சாந்தலிங்க மருதாசல அடிகளாரின் சைவமும் தமிழும் ஆன்மிக உரை 

Wednesday 05, December 2018, 20:50:19
 
மலேசிய, கிள்ளான் பகுதியில் டிசம்பர் 3 - தேதி மாலை 7.30 முதல்  9 மணி வரை மலேஷியா நால்வர் மன்றம் ஏற்பாட்டில் சைவமும் தமிழும் ஆன்மிக உரை நடைபெற்றது.
 
நிகழ்ச்சியில் திருக்கயிலாய மரபு மெய்கண்டார் வழிவழி பேரூராதீனம் கயிலைபுனிதர் சீர்வளர்சீர் சாதலிங்க மருதாசல அடிகளார் ஆன்மிக உரை ஆற்றினார். தமிழிற்கு சைவத்திற்கும் உள்ள தொன்மையான சிறப்புகளை எடுத்துரைத்தார்.
 
 
சைவமே தமிழ், தமிழே சைவம்  என்று சைவத்தோடு பின்னிப்பிணைந்து  உள்ளது நமது தமிழ். தமிழில் நால்வர் பல்வேறு அறிய பணிகளை ஆற்றியிருக்கிறார்கள். நம்முடைய பெரியவர்கள் கூறியது போன்று கல்தோன்றி மண்தோன்றா காலத்தே முன்தோன்றி மூத்த குடி என்று, மிக பழையன தொன்மையான  மொழி, ஐவகை நிலத்தில் முதலில் தோன்றிய மலையும் மலை சார்ந்த பகுதி குறிஞ்சி, குறிஞ்சி நிலத்தில் வாழ்த மக்கள் பேசிய மொழி நம் தமிழ் மொழி, மொழியோடு நிறுவிடவில்லை குறிஞ்சி நிலத்திற்கான தெய்வமாக முருகனை போற்றி வணக்கத்தையும் வைத்திருந்தார்கள். 
 
சைவ திருமுறைகளில் பதினோராவது திருமுறையாக போற்றப்படுவது, திருமுருகாற்றுப்படை இலக்கியங்களில் தொன்மையானது.
 
 
பத்துப்பாட்டு, எட்டுத்தொகை இலக்கியங்களில் தொன்மையானது, பத்துப்பாட்டில் முதன்மையானது திருமுருகாற்றுப்படை மேலும்  பன்னிருதிருமுறையில் ஒன்றாக அமைந்துள்ளது, தமிழ் இலக்கியங்கள் முதல் முதலில் வகுக்கப்பட்டபோது முதல் முதலில் கிடைத்திருப்பது  திருமுறை என்பது சைவத்திற்குண்டான பெருமைவாய்ந்தது. 
 
இரண்டாம் நூற்றாண்டு முதல் ஐந்தாம் நூற்றாண்டு வரை எடுத்துக்கொண்டால் இருண்டகாலம் என்றே கூறுவார்கள், இந்தக்காலங்களில் முத்தமிழை அழிவிலிருந்து காத்தவர்கள் நால்வர்களில் முதலிலே இருபவர்களான திருநாவுக்கரசர் மற்றும் திருஞான சம்மந்தர். அதனாலேதான் தமிழ் இன்று உலகெங்கிலும் வியாபித்திருக்கிறது இல்லையென்றால் அயல் மொழிகள் அழிந்திருக்கும் என்று பல்வேறு வரலாற்று சிறப்புகளை எடுத்துரைத்தார்.
© Copyright 2019 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz