நாடு முழுவதும் ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை : டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

Thursday 13, December 2018, 19:37:38

நாடு முழுவதும் ஆன்லைனில் மருந்து பொருட்களை விற்பனை செய்ய தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை உடனடியாக அமல்படுத்துமாறு மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முறையான வழிகாட்டுதல் இன்றி தினமும் லட்சக்கணக்கான மருந்துகள் ஆன்லைன் மூலம் விற்கப்படுவதாகவும். டாக்டர்கள் பரிந்துரையின்றி இந்த மருந்துகளை எடுத்துக் கொள்வதால் நோயாளிகள் பலர் பாதிக்கப்படுவதாக டெல்லியை சேர்ந்த தோல் சிகிச்சை நிபுணர் ஜாகிர் அகமது என்பவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.

ஆன்லைனில் விற்கப்படும் பெரும்பாலான மருந்துகள் அனுமதி பெறாதவை எனவும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த மனு நீதிபதிகள் ராஜேந்திர மேனன், வி.கே.ராவ் பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், ஏற்கனவே மத்திய அரசு பிறப்பித்துள்ள உத்தரவு மற்றும் மனுதாரர் அளித்துள்ள ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு ஆன்லைனில் மருந்துகளை விற்பனை செய்ய தடை விதிப்பதாக உத்தரவிட்டது

© Copyright 2020 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz