தர்மபுரி: மாவட்டக் காவல் ஆயுதப்படை வருடாந்திர ஆய்வு இன்று நடைபெற்றது

Saturday 29, December 2018, 18:48:59

தர்மபுரி மாவட்டக் காவல் ஆயுதப்படை வருடாந்திர ஆய்வு சேலம் சரகக் காவல் துணைத் தலைவர் செந்தில்குமார் தலைமையில் இன்று 29.12.2019ம் தேதி தர்மபுரி ஆயுதப்படை கவாத்து மைதானத்தில் நடைபெற்றது.

இன்று நடந்த வருடாந்திர ஆய்வின்போது சேலம் சரகக் காவல் துணைத் தலைவர், காவலர்களின் கவாத்துப் பயிற்சி, இரண்டு சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்களைப் பார்வையிட்டு ஆய்வினை மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது தர்மபுரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பண்டி கங்காதர், உதவி காவல் கண்காணிப்பாளர் (பயிற்சி) சம்மி சிங் மீனா, பென்னாகரம் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் மேகலா ஆகியோர் உடன் இருந்தனர்.

 

 

© Copyright 2019 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz