பள்ளிகளில் 8-ஆம் வகுப்பு வரை மாணவர்களின் கட்டாயத் தேர்ச்சி இரத்து!

Friday 04, January 2019, 16:45:12

பள்ளிகளில் 8-ஆம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி அளிக்கும் கல்விக் கொள்கையை ரத்து செய்வதற்கான சட்டத் திருத்த மசோதா, மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது

மக்களவையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதாவை, மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தாக்கல் செய்தார்.

இதனையடுத்து குரல் வாக்கெடுப்புடன் நிறைவேற்றப்பட்டது.

எனினும், மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இடதுசாரி கட்சிகளின் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

மசோதா மீதான விவாதத்தின்போது, பேசிய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், நாடாளுமன்ற நிலைக் குழு ஒப்புதல் அளித்துள்ள இந்த மசோதா மூலம், சரிவர படிக்காத மாணவர்களை அதே வகுப்பில் நிறுத்தி வைப்பதற்கு மாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

புதிய சட்டத் திருத்த மசோதாவின்படி, 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு ஆண்டு இறுதியில் தேர்வு நடத்தப்படும் என்றும், அந்தத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு அடுத்த இரு மாதங்களில் மீண்டும் ஒரு தேர்வு நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

© Copyright 2020 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz