கிருஷ்ணகிரி வந்த 108 அடி உயரத்தில் கோதண்டராமர் சிலை

Thursday 31, January 2019, 00:05:58

கர்நாடகா மாநிலம் ஈஜிபுரா பகுதியில் 108 அடி உயரத்தில் கோதண்டராமர் சிலை அமைக்கப்பட உள்ளது. இச்சிலை செய்ய 350 டன் எடை கொண்ட பாறை திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த கொரக்கோட்டை மலையில் இருந்து வெட்டி எடுக்கப்பட்டது. 64 அடி உயரம், 26 அடி அகலம் கொண்ட இந்தப் பாறையில் முகம் மட்டும் வடிவமைக்கப்பட்டு கடந்த மாதம் ‌ஏழாம் தேதி 240 டயர்கள் கொண்ட கார்கோ லாரியில் புறப்பட்டது. ‌

இதற்கி‌‌‌டையில் கடந்த வாரம் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பாம்பாறு தரைப்பாலத்தை கடக்க முடியாமல் லாரி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. கூடுதல் இன்ஜின் உதவியுடன் விஷ்வரூப கோதண்டராமர் சிலை பாம்பாறு தரைப் பாலத்தை கடந்தது.

ஊத்தங்கரை வழியாக மத்தூர் வந்தடைய வேண்டிய ‌கோதண்டராமர், சாமல்பட்டி ரயில்வே பாலத்தில் போதிய அகலம் இல்லாத காரணத்தால் கடக்க முடியாமல் போனது. இதனால்‌ மாற்றுப்பாதையான கெரிகேபள்ளி, புலியூர், போச்சம்பள்ளி, மத்தூர் வழியாக இன்று கிருஷ்ணகிரியை வந்தடைந்தது.

கிருஷ்ணகிரி அருகே அஞ்சூர், மற்றும் வேட்டியம்பட்டி பகுதியில் வந்த போது லாரியின் டயர் பஞ்சர் ஆனதால் மாற்று டயர் பொருத்திய பின் கோதண்டராமர் சிலை இன்று மாலை திருவண்ணாமலை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை சந்திப்பை வந்தடைந்தது. அப்போது ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் சிலை வந்ததும் கோவிந்தா கோவிந்தா என கோஷத்துடன் வழிபட்டனர். மேலும் தங்களது கைப்பேசியில் படமெடுத்து மகிழ்ந்தனர்.

© Copyright 2019 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz