கொடநாடு என்பது துரோகத்தின் சின்னம் - கமல்ஹாசன் பரபரப்புப் பேட்டி

Thursday 31, January 2019, 00:20:53

மக்கள் நீதி மய்யம் தலைமை அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை கமல்ஹாசன் சந்தித்துப் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:

"எல்லா போராட்டங்களிலும் அரசின் செயல்பாடு சரியில்லை என்பது நிதர்சனமான உண்மை, மாணவர்களின் நலன் கருதி ஆசிரியர்கள் வாபஸ் பெற்றதற்கு அவர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்

வரும் தேர்தலுக்காக பிற கட்சிகளுடன் மக்கள் நீதி மய்யம் கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடக்கிறது. கூட்டணி உறுதி செய்யப்படாததால் இப்பொழுது அதனை பற்றி கூற முடியாது

பிரியங்கா காந்தியின் அரசியல் வரவை வரவேற்கிறேன். தமிழகம் முழுவதும் தேர்தல் வேலை செய்ய 68 ஆயிரம் பூத் கமிட்டி உறுப்பினர்கள் தயாராக உள்ளனர்

8 கிராமங்களை தத்து எடுப்பதற்கான வேலைகள் நடைபெற்று வருகிறது, அது குறித்து விரைவில் அறிவிப்பு செய்வோம்

கொடநாடு என்பது துரோகத்தின் சின்னம். ஆறுமுகசாமி ஆணையத்தின் பின்னால் அரசு இருப்பதால் ஆணையத்தின் செயல்பாடுகள் அவர்கள் திட்டமிட்டு செய்வதாக கூட இருக்கலாம்"

என்று அவர் கூறினார்.

© Copyright 2019 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz