லோக்சபா தேர்தலுக்கு பின்பே உள்ளாட்சி தேர்தல் நடக்கும் - தமிழக தலைமைத் தேர்தல் ஆணையர் அறிவிப்பு!

Thursday 31, January 2019, 00:28:54

உள்ளாட்சி தேர்தல் குறித்து தமிழக தலைமைத் தேர்தல் ஆணையர் மாலிக் பெரோஸ்கான் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

லோக்சபா தேர்தலுக்கான பணிகள் நடந்து வருகிறது. லோக்சபா தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்பட்டுவிட்டது. நாளை மாலை 4 மணிக்கு இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலகங்களிலும் இறுதி வாக்காளர் பட்டியல் நாளை மாலை 4 மணிக்கு வெளியிடப்படும். மக்கள் தங்கள் பெயர்களை இந்த பட்டியலில் சரிபார்த்துக் கொள்ளலாம்.

லோக் சபா தேர்தலுடன் மாநில சட்டமன்ற இடைத்தேர்தலை நடத்துவது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை. தலைமை தேர்தல் ஆணையம் கூறினால் இரண்டையும் சேர்த்து நடத்துவோம்.

லோக்சபா தேர்தலுக்கு பின்பே உள்ளாட்சி தேர்தல் நடக்கும். மே மாதம் உள்ளாட்சி தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று என்றார்.

© Copyright 2019 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz