மாநகராட்சியாக உதயமாகிறது ஓசூர்

Wednesday 13, February 2019, 19:12:48

ஓசூர் சென்னை நகரில் இருந்து மேற்கே 306 கிலோமீட்டர் தொலைவிலும் பெங்களூர் நகரத்தில் இருந்து 40 கி.மீ தொலைவிலும் உள்ளது. இந்த நகரம் தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநில எல்லைப் பகுதியில் உள்ளது. இந்நகரம் பெருகி வரும் தொழிற்சாலைகளாலும், குளிர்ந்த தட்பவெப்பநிலையாலும் அறியப்படுகிறது. ஹொச என்ற கன்னடச் சொல்லின் பொருள் புதிய என்பதாகும். ஒசூர் என்பதன் பொருள் புதூர் (புதிய ஊர்) என்பதாகும்

1980 ஆண்டு தொழில்மயமாக்கல் தொடங்கிய போது சிப்காட் உதவியுடன் தமிழகத்தில் ஓசூர் ஒரு சிறந்த தொழில் வளர்ச்சி அடைந்து வரும் ஒரு முக்கிய தொழிற்சாலை நகரம் ஆனது. பிரித்தானிய ஆட்சிக் காலத்தில், சேலம் கலெக்டர் வால்டன் லிலியட், ஓசூரை சேலம் மாவட்டத்தின் தலைமையகமாக செய்தார்.

1902 இல் ஒசூர் ஊராட்சியானது, 1969 ல் ஓசூர் தேர்வு நிலை பேரூராட்சியாக அமைக்கப்பட்டது. பின் 1992 ஆம் ஆண்டு இரண்டாம் நிலை நகராட்சியாக மேம்படுத்தப்பட்டது. 1998 இல் தேர்வு நிலை நகராட்சியானது. 2011 ஆண்டு மத்திகிரி பேரூராட்சி, சூசூவாடி, மூக்கண்டபள்ளி, ஆவலப்பள்ளி, சென்னத்தூர் ஆகிய ஊராட்சிகள் ஒசூர் நகராட்சியுடன் இணைக்கப்பட்டு சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது

இந் நகரில் இயந்திரத்தொழில் நன்கு வளர்ச்சி பெற்றுள்ளது. டிவிஎஸ் மோட்டார், அசோக் லேலண்ட், டைட்டன் நிறுவனம், இந்துஸ்தான் மோட்டர்ஸ், ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட், இந்துஸ்தன் யூனிவர்சல், கேடர்பிள்ளர், டாட்ரா வேக்ட்ரா, தநீஜா ஏரொஸ்பேஸ் & ஏவிஎசன் லிமிடெட், பாடா இந்திய லிமிடெட், ஆரொ கிரைநைட், மதுகான் கிரைநைட், ஏஃசஈடு, INEL-இந்தியா நிப்பான் எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட், சுந்தரம் பாஸ்ட்னர்ஸ், முதலான நிறுவனங்களின் தொழிற்சாலைகள் இங்குள்ளன. தமிழக அரசால் 1538.41 ஏக்கரில் தொடங்கப் பட்ட சிப்காட் தொழிற்பேட்டை (சிப்காட்-1 & சிப்காட்-2) இங்கு செயல்பட்டு வருகிறது.

ஓசூரில் இருந்து தோபஷபெட் வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலை என்.எச்207 இங்கு இருந்து ஆரம்பமாகிறது. அதே போல் இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை என்.எச்44 (பழைய எண் என்.எச்7) உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள வாரணாசி (காசி அல்லது பெனாரஸ்) என்னும் நகரத்தில் இருந்து தமிழ் நாட்டில் உள்ள கன்னியாகுமரி நகரையும் இணைக்கும் இந்த சாலை ஓசூர் வழியாகச் செல்கிறது

ஓசூரின் வான்வெளிக்களம் இந்தியாவில் பொது விமான போக்குவரத்து விமானங்கள் உற்பத்தி செய்யும் முதல் தனியார் துறை நிறுவனம் 1994 இல் நிறுவப்பட்டது. தானுஜா விண்வெளி மற்றும் விமான லிமிடெட் (தால்), நிர்வகிக்கப்படுகிறது. இந்கு ஏர்பஸ் ஏ 320 மற்றும் போயிங் 737 விமானம் ஏற்று திறன் 7012 அடி நீண்ட மற்றும் 150 அடி அகலம், 09/27 சார்ந்த ஒரு நிலக்கீல் ஓடுபாதை மற்றும் இரவு இறங்கும் வசதிகள் உள்ளன. பெங்களூர் சர்வதேச மற்றும் உள்நாட்டு விமான நிலையம் 80 கிமீ தொலைவில் உள்ளது.

© Copyright 2019 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz