கடலூர்: தமிழகத்தில் எங்களது மதசார்பற்ற கூட்டணி 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் வெற்றி பெறும் - காங் தலைவர் அழகிரி பேட்டி

Wednesday 13, February 2019, 19:27:15

கடலூருக்கு இன்று வந்திருந்த தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ் அழகிரி அங்குள்ள காமராஜ் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்கலைச் சந்தித்து அவர் பேசினார்.

செய்தியாளர்களிடம் அழகிரி கூறியதாவது:

"என்.எல்.சி.நிறுவனம் நிலம் கையகபடுத்துவதை கைவிட வேண்டும் மின்சாரத்திற்க்கு மாற்று ஏற்பாடாக தரிசு நிலங்களில் கடற்கரை பகுதிகளில் சோலார் மின் உற்ப்பத்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளலாம் காங்கிரஸ் ஆட்சியில்தான் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டது.

மத்திய அரசு விவசாயிகளுக்கு 6. ஆயிரம் தருவதாக கூறுவது போதாது காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்த 48 மணி நேரத்தில் விவசாய கடன் தள்ளுபடி செய்யப் படும் ரபேல் ஊழல் குறித்து காங்கிரஸ் கட்சி ஆதாரபூர்வமாக நிரூபித்து உள்ளது பாராளுமன்றத்தில் மோடி ரபேல் ஊழல் குறித்து விவாதிக்க தயாரா? என்று நாங்கள் கேட்கிறோம்.

காங்கிரஸ் ஜி.எஸ்.டி வரியை 18 சதவிதத்திற்க்குள் தான் கொண்டு வந்தது தற்போதைய பி.ஜே.பி.அரசு ஜி.எஸ்.டி வரியை 25. சதவிதம் 40. சதவிதம் என வரி விதித்து மக்களை நசுக்கி வருகிறது மத்திய அரசின் பண மதிப்பிழப்பால் சிறு. குறு. தொழில்கள் நலிவடைந்து விட்டன.

தமிழகத்தைப் பொறுத்தவரை திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தலைமையிலேயே மதசார்பற்ற தேர்தல் கூட்டணி அமைக்கப்பட்டிருக்கிறது எங்களுடைய கொள்கை ரீதியான தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் செலுத்த வேண்டும் தமிழகத்தில் ஊழலற்ற ஆட்சியை கொண்டுவர வேண்டும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தரக்கூடிய ஒரு அமைப்பை உருவாக்கவேண்டும்.

ஜப்பானை போன்று கொரியாவை போன்று சிங்கப்பூரை போன்று தமிழகத்தையும் மாற்ற முடியும் என்கின்ற தொழில் கொள்கையை உருவாக்க வேண்டும் இதை மையப்படுத்திதான் தமிழகத்திலேயே மதசார்பற்ற கூட்டணி அமைந்து இருக்கிறது இந்த கூட்டணியை 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் நாங்கள் வெற்றி பெறச் செய்வோம். எங்களுடைய ஆதரவை வாக்குகளாக மாற்ற வேண்டும் என்பதற்கான கடமையைத்தான் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செய்து வருகிறது

இரண்டாவதாக நம்முடைய மாவட்டத்தை பொறுத்த வரை நம்முடைய மாவட்டத்தில் சுற்றுச்சூழல் என்பது மிகவும் மோசமான ஒரு சூழலில் இருக்கிறது பருவகால வெதர் ரிப்போர்ட் அங்கு சென்று வருவது ஆபத்தானது என்று வருகிறது அதுதான் கடலூர் மாவட்டத்தில் இருக்கின்ற நெய்வேலி அனல் மின் நிலையங்கள் தேவை இல்லை என்பது என் கருத்து என அவர் தெரிவித்தார்.

© Copyright 2019 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz