கிருஷ்ணகிரி: உண்டு உறைவிட பள்ளிகள் மேம்பாட்டுக்காக ரூ. 1கோடியே 33 லட்சம் நிதி வழங்கப்பட்டது!

Monday 04, March 2019, 18:07:24

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்  - மாவட்ட ஆட்சித் தலைவர்  பிரபாகர் தலைமையில் இன்று நடைபெற்றது.

இக் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில்  பொதுமக்கள் குடிநீர் வசதி, மின்வசதி, கல்வி உதவித் தொகை, ஓய்வூதியத் தொகை, இலவசத் தையல் இயந்திரம், சலவைப் பெட்டி, மற்றும் சாலை வசதி வேண்டியும், மின் இணைப்பு, வீட்டுமனைப் பட்டா, பல்வேறு கோரிக்கைகள் உள்ளிட்ட மொத்தம் 317  மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர்  அது குறித்துச் உடனடியாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மாநில சமச்சீர் வளர்ச்சி  திட்டத்தின் கீழ் பள்ளிக் கல்வித் துறைக்காக கஸ்தூரிபாய் பாலிக உண்டு உறைவிட பள்ளிகளுக்கு  சமையல் அறை, வகுப்பறை, மற்றும் உணவுக் கூடம் உள்ளிட்ட வசதிகளை மேற்கொள்ள ரூ. 1 கோடியே 33 லட்சத்திற்கான காசோலை மற்றும் பணிகள் மேற்கொள்ள உத்தரவினையும். அதற்காக ரூ. 1 கோடியே  33 லட்சத்திற்கான காசோலையையும் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபாகர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மகேஸ்வரியிடம் வழங்கினார்.   

ஊரக வளர்ச்சியில் பணி புரிந்து பணிகாலத்தில் மரணமடைந்த வாரிசுதாரர்கள் நால்வருக்கு ஊரக வளர்ச்சித் துறையில் இளநிலை உதவியாளர் பணி நியமன ஆணைகளை ஆட்சியர் வழங்கினார்.

மாவட்ட ஆட்சித் தலைவரின் விருப்ப நிதியிலிருந்து மருத்துவச் செலவினம், பாராமரிப்புத் தொகை என மொத்தம் 9 பயனாளிகளுக்கு ரூ. 88 ஆயிரத்திற்கான காசோலைகளை ஆட்சியர் வழங்கினார்.

இந் நிகழ்ச்சியின் போது மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ராமமூர்த்தி, தனித் துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) சந்தியா, மாவட்ட பிற்பாட்டோர் நலத்துறை அலுவலர் அய்யப்பன், மாவட்ட வழங்கல் அலுவலர் சந்திரசேகர்  அரசு அலுவலர்கள்  கலந்து கொண்டனர்.

 

 

© Copyright 2019 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz