தர்மபுரி மாவட்டத்தில் 95 கி.மீ ஊராட்சி ஒன்றிய சாலைகள் ரூ.50.59 கோடி  மதிப்பீட்டில் தரம் உயர்த்தப்படுகின்றன - அமைச்சர் அன்பழகன் தகவல்

Monday 04, March 2019, 18:30:37

தர்மபுரி மாவட்டம், ஊராட்சி ஒன்றிய சாலைகளை மாவட்ட இதர சாலைகளாக தரம் உயர்த்துதல் திட்டத்தின் கீழ்  பாலக்கோடு வட்டம்  தளவாய்அள்ளிபுதூரில் நடைபெற்ற விழாவில் ஒசூர்  அதியமான்கோட்டை பிரதான சாலை முதல்  சின்னப்பங்கொட்டாய் சாலை  வரை  ரூ.1.50 கோடி  மதிப்பீட்டில்  3.00 கி.மீ. தொலைவிற்கு தரம் உயர்த்துதல் பணியை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பூமிபூஜை செய்து இன்று தொடங்கி வைத்தார்.

தர்மபுரி மாவட்டத்தில்  ஊராட்சி ஒன்றிய சாலைகளை மாவட்ட இதர சாலைகளாக தரம் உயர்த்துதல் திட்டத்தின் கீழ் 31 பணிகள் ரூ.50.59 கோடி  மதிப்பீட்டில் 94.73 கி.மீ. தொலைவிற்கு தரம் உயர்த்துதல் பணிகள் நடைபெற்று வருவதாகவும், இப் பணியானது 6 மாதத்தில் நிறைவுபெற்று பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என்றும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.

முன்னதாக பாலக்கோடு தேர்வு நிலைப் பேரூராட்சி 2018-19 ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தின் கீழ் முனியப்பன் கோவில் அருகில்  ரூ.75 இலட்சம் மதிப்பில் பேவர் பிளாக் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணியும் பூமிபூஜை போடப்பட்டுத் தொடங்கி வைக்கப்பட்டது.

இவ்விழாவில் தர்மபுரி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்தலைவர் டி.ஆர்.அன்பழகன், பாலக்கோடு சர்க்கரை ஆலைத் தலைவர் நாகராஜன், உதவி கோட்டப் பொறியாளர் ரஞ்சினிபிளாரன்ஸ்,  பாலக்கோடு சர்க்கரை ஆலை முன்னாள் தலைவர் அரங்கநாதன், முன்னாள் ஒன்றியக் குழு தலைவர் கோபால், கூட்டுறவு சங்கத் தலைவர்கள் பொன்னுவேல், கோவிந்தசாமி, வீரமணி, சிவபிரகாசம், சங்கர், வீரமணி,  உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) ஜிஜாபாய், வட்டாட்சியர் வெங்கடேஸ்வரன், செயல் அலுவலர்  ஜலேந்திரன், உதவி பொறியாளர் திரு.குருபிரகாஷ்  ஆகியோர் கலந்து கொண்டனர்.

© Copyright 2019 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz