திமுக பொருளாளர் துரைமுருகனிடம் பேசியது என்ன? – சுதீஷ்  விளக்கம்

Thursday 07, March 2019, 19:19:08

தேமுதிக துணை பொதுச்செயலாளர் சுதீஷ் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் திமுக பொருளாளர் துரைமுருகனிடம் பேசியது என்ன என்பது குறித்த விளக்கத்தினைத் தந்தார்.

செய்தியாளர்களிடம் சுதீஷ் கூறியதாவது....

“திமுக பொருளாளர் துரைமுருகனை தனிப்பட்ட காரணங்களுக்காக பார்க்க சென்றேன். நாங்கள் அரசியலே பேசவில்லை. திமுகவுடன் தேமுதிக பேசுவதாக எல்லோரும் கூறுகிறார்கள்.

நாங்கள் முதலில் பாஜகவுடன் கூட்டணி குறித்தும் பேசினோம். பாஜகவினர் அதிமுகவுடன் கூட்டணி வைத்ததால், நாங்களும் அதிமுகவுடனும் பேசினோம்.

பாமகவுடன் கூட்டணியை உறுதியாக்கி  ஒப்பந்தம் செய்த அதிமுக, அதே சமயத்தில் எங்களுடனும் ஒப்பந்தம் செய்திருக்கலாம். பாமகவுடன் செய்தது போல அதிமுக எங்களுடன் ஒப்பந்தம் செய்யாதது வருத்தம் அளித்தது. பாமக - அதிமுக கூட்டணியை நாங்கள் எதிர்க்கவில்லை.

திமுக அதன்பின் எங்களுடன் பேசியது. துரைமுருகன் என்னிடம் பேசியதை நான் சொல்லட்டுமா? துரைமுருகன் அவரின் கட்சியை பற்றி பேசியதை சொல்லட்டுமா? துரைமுருகன் அவரின் தலைமை குறித்து பேசியதை சொல்லட்டுமா?” என்ற அடுக்கடுக்கான வினாக்களுடன் தனது பேட்டியினை சுதீஷ் முடித்துக் கொண்டார்,

 

© Copyright 2019 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz