தர்மபுரி: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தைப் பயன்படுத்துவது குறித்துத் தேர்தல் அலுவலர்களுக்குப் பயிற்சி

Friday 15, March 2019, 23:28:25

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் பாராளுமன்றப் பொதுத் தர்தல் - 2019 பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் (தனி) சட்டமன்ற இடைத்தேர்தல் 18.04.2019 அன்று நடைபெறுவதையொட்டி VVPAT மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தைப் பயன்படுத்துவது,  மாதிரி வாக்குச்சாவடி அமைத்து 140 மண்டல அலுவலருக்கானப் பயிற்சி மாவட்டத் தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித்தலைவருமான மலர்விழி தலைமையில் நடைபெற்றது.

இக் கூட்டத்தில் தர்மபுரி ஆட்சியர் பேசியதாவது:

தர்மபுரி நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் - 2019, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் (தனி) சட்டமன்ற இடைத்தேர்தல் 18.04.2019 அன்று நடைபெறுவதையொட்டி VVPAT மின்னணு இயந்திரத்தை பயன்பத்தி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

பாப்பிரெட்டிப்பட்டி மற்றும்  அரூர் (தனி) சட்டமன்ற இடைத்தேர்தலும் ஒரே நேரத்தில் நடைபெறுவதால் பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் (தனி) சட்டமன்றத் தொகுதி வாக்காளர்கள் 2 வாக்குகள்  செலுத்திட வேண்டும்.

வாக்காளர்கள் அடையாள அட்டை, தேர்தல் ஆணையம் அனுமதித்த 11 சான்றிதழ்களைக் காண்பித்து வாக்களிக்கலாம்.  மண்டல அலுவலர்கள் நல்ல முறையில்  பயிற்சி  பெற்று வாக்குச்சாவடி  அலுவலர்களுக்குப்  பயிற்சி வழங்கிட வேண்டும்

வாக்குச்சாவடி மையம்  எவ்வாறு  அமைப்பது என்பதுடன் என்னென்ன வாக்குச்சாவடி மையத்தில் இருக்க வேண்டும் என்பதை அறிந்து அதுபோல வாக்குச்சாவடி மையங்களை  அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித் தலைவருமான மலர்விழி கூறினார்.

முன்னதாக தர்மபுரி, பாலக்கோடு, பென்னாகரம்,  பாப்பிரெட்டிப்பட்டி, அரூர்; சட்டமன்ற தொகுதி வாரியாக  மண்டல அலுவலர்களுக்குப்  பயிற்சி அளிக்கப்பட்டது.

இந் நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் ரஹமத்துல்லா கான்,  அரூர் சா;க்கரை ஆலையின் மேலாண்மை இயக்குநர் கீர்த்தி பிரியதர்ஷினி, ஆதிதிராவிடர் நல அலுவலர் கோவிந்தன்,  பாப்பிரெட்டிப்பட்டி தேர்தல் நடத்தும் அலுவலர் கீதாராணி  ஆகியோர் கலந்து கொண்டனர்.

© Copyright 2019 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz