மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தைத் தடைசெய்து வாக்குச்சீட்டின் மூலம் தேர்தல் நடத்த சட்டக் கல்லூரி மாணவி போராட்டம்

Saturday 16, March 2019, 17:51:03

மதுரையைச் சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவி நந்தினியும் அவரது தகப்பனார் ஆனந்தனும் மதுவிலக்குக்கு ஆதரவாகக் குரல்கொடுத்துக் களமாடி வருகின்றனர். மாணவி நந்தினி இதற்காகப் பல்வேறு முறை கைதாகி சிறையும் சென்றுள்ளார். இப்போது அவரைத் தொடர்ந்து அவரது நந்தினியின் தங்கை நிரஞ்னாவும் தனது அக்காவைப் போன்றே மதுவுக்கு எதிராகக் களமிறங்குகிறார்.

தற்போது மதுரை சட்டக்கல்லூரி 4ஆம் ஆண்டு பயின்று வரும் மாணவி நிரஞ்னா தனது  அப்பா ஆனந்தனும் இணைந்து அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட வலியுறுத்தியும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தைத் தடைசெய்து வாக்குச்சீட்டின் மூலம் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தியும் தமிழகம் முழுதுமான தனது பிரச்சாரச்சாரத்தினைத் தொடங்கி உள்ளனர்.

தேர்தல் ஆணையமே! EVM-ஐ தடை செய்து வாக்குச்சீட்டில் நியாயமாக தேர்தல் நடத்து! நீதிமன்றமே! இ.பி.கோ செக்‌ஷன் 328-ன் படி அனைத்து டாஸ்மாக் கடைகளையும் இழுத்து மூடு! போன்ற வாசகங்கள்  பதாகைகளுடன் தமிழகம் முழுவதும் இவர்கள் இருவரும் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளனர்.
நாளை (17.03.19) அப்பா ஆனந்தனும் தங்கை நிரஞ்சனாவும் (மதுரை சட்டக்கல்லூரி 4ஆம் ஆண்டு மாணவி) உளுந்தூர்பேட்டையில் இருந்து முதற்கட்ட பிரச்சாரத்தை தொடங்குகின்றனர் என்று நந்தினி செய்தியாளர்களிடத்தில் தெரிவித்துள்ளார்.

© Copyright 2019 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz