தினகரன் முன்னிலையில் அமமுக கட்சியில் இணைந்த டான்ஸ் மாஸ்டர் கலா

Saturday 23, March 2019, 18:41:13

அடுத்த மாதம் 18ம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கட்சியிலும் புது உறுப்பினர்கள் சேர்ந்த வண்ணம் இருக்கின்றனர். அந்த வகையில் இன்று தினகரனின் அ.ம.மு.க -வில் இன்று இணைந்துள்ளார் கலா மாஸ்டர்.

கலைஞர் டி.வியில் `ஓடி விளையாடு பாப்பா' நிகழ்ச்சியின் இயக்குநரான கலா இப்போதுதான் முதன் முதலாக ஒரு கட்சியில் இணைந்துள்ளார். இது குறித்து அவரிடம் கேட்டபோது,

`ரொம்ப சந்தோஷமாக இருக்கு. என்னைச் சுற்றி இருக்கும் நிறைய நண்பர்கள் தினகரன் குறித்து நிறைய விஷயங்களைச் சொல்லியிருக்கிறார்கள். நானும் கொஞ்ச நாள்களாக அவரின் பேட்டிகள், மற்றவரை அணுகும் முறை எனப் பல விஷயங்களை நோட் பண்ணிட்டு இருக்கேன்.

நான் பொதுவாகவே தெய்வ பக்தி உள்ள ஆள். விநாயகர் என் ஆஸ்தான கடவுள். ஏதோ ஒரு விஷயம் பிடிக்கப் போய்தான் இன்று அ.ம.மு.க -வில் இணைந்திருக்கிறேன் என்று நினைக்கிறேன். அவரைச் சந்தித்த பதற்றம் இப்போது வரை அப்படியே இருக்கிறது.

அவரைச் சந்தித்தவுடன், `வாங்க மாஸ்டர்..!' என்றார். எனக்கு அவர் அப்படிக் கூப்பிட்டது மிகவும் பிடித்திருந்தது. புல்லரிச்சுப் போயிடுச்சு. ஏனென்றால், எனக்குத் தெரிந்தவரை பெரும்பாலான தலைவர்கள் அவர்களுடைய பெயரை மட்டுமே அழைப்பார்கள். அவர்கள் சார்ந்த துறையையோ, தகுதியை வைத்து அழைப்பது கிடையாது. ஆனால், என்னை மாஸ்டர் என்று அழைத்துப் பெருமைப்படுத்தியுள்ளார்.

என்னைப் பொறுத்தவரை ஒரு டான்ஸ் ஷோவுக்கு காஸ்டியூம் செலக்ட் செய்வதாக இருந்தாலும் சரி, எந்த வேலையாக இருந்தாலும் சரி அதில் என்னுடைய அர்ப்பணிப்பு கண்டிப்பாக இருக்கும். அதேபோலத்தான், இந்தக் கட்சியின் உறுப்பினராக இணைந்ததிலும்" என்றார் கலா.

"சும்மா கிழி, கிழி!"

© Copyright 2020 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz