மோடி ‘நாட்டின் காவலன்’ என்பது ஊனமுற்றவர் மாந்தோப்பைக் காவல் காப்பது போன்றது - தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கருத்து

Monday 25, March 2019, 18:19:06

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது:

“நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பாஜக அதிமுக கூட்டணி மாநில உரிமைகள் மீட்கப்படும் என்று கூறியுள்ளார்

முதன் முதலில் மாநில உரிமைகள் மீட்பதற்க்கான சட்டம் இயற்றியவர் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு பல்வேறு காலகட்டத்தில் கருணாநிதி, ஜெயலலிதா போன்றோர் மாநில உரிமையை மீட்டுள்ளனர்

ஆனால் தற்போது உள்ள அரசு மாநில மத்திய அரசிடம் உரிமையை அடகு வைத்துள்ளது. காவிரி மேலாண்மை வாரியத்திற்கு நிரந்தர தலைவரை நியமிக்க நிர்பந்திக்க முடியாத அரசு எடப்பாடி அரசு.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு தேவையான நிதியை பெற முடியாமல் நமது உரிமை இழந்து பாஜக விடம் மண்டியிட்டுக் கிடக்கின்றார் தமிழக முதல்வர்

மேகதாது அணை கட்ட  மத்தியரசு அனுமதி அளித்துள்ளது இதில் நமது உரிமை விட்டுக் கொடுக்கப்பட்டு விட்டது இது பாஜக அடிமை அரசாங்கமாக உள்ளது

ஜெயலலிதா இருந்த போது இருந்த அதிமுக தற்போது இல்லை  மோடி ‘நாட்டின் காவலன்’ என்பது ஊனமுற்றவர் மாந்தோப்பை காவல் காப்பது போன்றது

நாட்டின் பாதுகாப்பிற்காக நடத்தப்படும் துல்லியத் தாக்குதல்களை வெளியில் சொல்லக் கூடாது. காங்கிரஸ் அரசாங்க இருந்த போதும் இது போன்ற தாக்குதல் நடந்தது ஆனால் அதை வெளியில் சொல்லி விளம்பரம் தேடவில்லை

ஆனால் நமது இராணுவ நடவடிக்கைகளை பாஜகவின் தலைவர் அமித்சா அறிவிக்கின்றார். இராணுவ நடவடிக்கைகளை தேர்தல் ஆதாயத்திற்காக பாஜக பயன்படுத்துகின்றது இது வன்மையாக கண்டிக்க தக்கது

வாய்ப்பு கிடைக்காதவர்கள் கட்சி மேலிடத்திடம் தான் கருத்து சொல்ல வேண்டும்  அதை தவிர்த்து ஊடகங்களில் கருத்து சொல்வது தவறான செயல்

குடும்பத்தில் ஒருவருக்கு பதவி என்பது குறித்து நேற்று மன்மோகன் சிங் தலைமையில் ஆலோசனை நடத்திய பின்புதான் முடிவு எடுக்கப்பட்டுள்ளது

அதன்படி தான் கார்த்திக் சிதம்பரம் அறிவிக்கப்பட்டுள்ளார். சுதர்சனம் நாச்சியப்பன் வருத்தம் சரியானது. ஆனால் வெளிப்படுத்தும் விதம் தான் தவறு. அவர் வருத்தத்தில் பேசுகிறார் நாளை சரியாகி விடுவார்

ப.சிதம்பரம் பாஜகவை எதிர்க்கும் முக்கியத் தலைவர் அவர் கேட்கும் கேள்விகளுக்கு பாஜகவால் பதில் அளிக்க முடியவில்லை இதனால், அவர் மீதும் அவர் குடும்பத்தின் மீதும் வழக்கு தொடர்ந்து அடிபணிய வைக்க முயல்கின்றது ஆனால், அது முடியவில்லை. சிபிஐயால் இன்று வரை அவருக்கு எதிரான ஆதாரத்தைத் தாக்கல் செய்ய முடியவில்லை.

தேர்தல் சமயத்தில் வியாபாரிகள் விவசாயிகள் கொண்டு செல்லும் பணத்தை பிடித்து அதை அதிகாரிகள் விளம்பரப்படுத்துவார்கள் ஆனால், தேர்தலுக்கு இரண்டு நாட்கள் முன்பு அரசியல்வாதிகள் வெளிப்படையாகப் பணம் கொடுப்பார்கள். ஆனால், அதை தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளாது

சென்றமுறை தேர்தல் ஆணையம் தனது செயலில் தோல்வி அடைந்தது இந்த முறை அந்தத் தவறை மீண்டும் செய்ய கூடாது” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார்.

© Copyright 2020 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz