மும்பையில் இருந்து சிங்கப்பூர் சென்ற விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

Wednesday 27, March 2019, 17:19:42

மும்பையிலிருந்து சிங்கப்பூர் சென்ற பயணிகள் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து போர்விமானங்களை சிங்கப்பூர் விமானப்படை அனுப்பியது.

சாங்கி விமான நிலையத்தில் அந்த விமானம் பத்திரமாக தரையிறங்கும் வரை இரண்டு எப்16 போர் விமானங்கள் பாதுகாப்புக்காக உடன் சென்றதாக விமானப்படையினர் தெரிவித்தனர்.

மும்பையில் இருந்து 263 பயணிகளுடன் புறப்பட்ட சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக தொலைபேசியில் மர்ம நபர் ஒருவர் மிரட்டல் விடுத்திருந்தார்.

இதையடுத்து அந்த விமானத்தை வட்டமிட்ட போர் விமானங்கள் அதை பத்திரமாக தரையிறங்கச் செய்யும் வரை அரண் அமைத்தன.

பின்னர் விமானத்தை சோதனையிட்ட அதிகாரிகள் பயணிகளிடமும் விசாரணை மேற்கொண்டனர்.

© Copyright 2019 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz