என் அண்ணனின் தனிப்பட்ட விஷயங்களை மக்கள் முன் நான் கூற வேண்டி வரும் - நடிகர் நாசரின் தம்பி ஜவஹர் ஆவேசம்.

Saturday 30, March 2019, 16:16:24

சென்னைப் பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை இன்று நடிகர் நாசரின் தம்பி ஜவஹர்  சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

நான் நடிகர் நாசரின் தம்பி எனது பெயர் ஜவஹர் அருகில் இருக்கும் தம்பி பெயர் ஜாஹீர். நான் எனது தம்பி ஜாஹிர் அப்பா ,அம்மாவுடன் செங்கல்பட்டில் வசித்து வருகிறோம். நான் 10 வருடம் ஃப்ரான்ஸில் சம்பாதித்த பணத்தில் வீடு கட்டி அதில் வரும் வாடகையில் குடும்பம் நடத்தி வருகிறோம்.

நாசருக்கு திருமணம் ஆனதிலிருந்து எங்களை கவனிக்கவில்லை, அவரின் மனைவி கமீலா அனுமதிப்பதில்லை. நடிகர் சிவகுமாரிடம் புகார் செய்தேன். நடிகர் சங்கத்திலும் புகார் கொடுத்தேன். நடிகர் விஷாலை சந்திக்கச் சென்றேன். என்னைச் சந்திக்க மறுத்து விட்டார். அதன் பிறகு மாதம் 25,000 தருவதாகக் கூறி எனது அக்காவிடம் கொடுத்து வந்தார்.

பஞ்சாயத்துப்பண்ணி பணம் வாங்க வேண்டாம் என்று கூறி எனது அம்மா அந்தப் பணத்தை வாங்க மறுத்து விட்டார். நாசர் ஒரு அப்பாவி.நாசரின் மனைவி கமீலா தான் தான் எங்கள் குடும்பத்தை நாசமாக்கி விட்டார்.

தனது குடும்பத்தைக் கவனிக்காத நாசர் எப்படி நாட்டைப் பார்க்கப் போகிறார். நான் இப்ப நினைத் தாலும் ஃப்ரான்ஸ் போக முடியும். ஆனால் என் அப்பா. அம்மா தம்பிக்காக என் வாழ்க்கையை அர்ப்பணித்து விட்டேன்.. நான் பேட்டி கொடுக்க ப்போகிறேன் என்றதும் நிறைய பேர் பேசினார்கள். இதுவரை எங்களைக் கண்டு கொள்ளாதவர்கள் இப்ப மட்டும் ஏன் வருகிறார்கள் என்று தெரியவில்லை.

நாசர் தனது அம்மாவையும், அப்பாவையும் காப்பாற்றவே இல்லை. இதற்கு கமல் பதில் சொல்ல வேண்டும். இந்தப் பேட்டி வெளியானதும் நாசர் என் மீது புகார் கூறுவார், அதை அவர் நிருபிக்கணும், இல்லா விட்டால் அவரது தனிப்பட்ட விஷயங்களை உங்கள் முன் கூற வேண்டி வரும் என்றார்.

© Copyright 2019 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz