திரைப்பட இயக்குநர் மகேந்திரன் உடலுக்கு திரையுலகப் பிரபலங்கள் நேரில் அஞ்சலி

Tuesday 02, April 2019, 21:28:05

தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற இயக்குனரான மகேந்திரன் (79) சிறுநீரக கோளாறுக்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை காலமானார்.

அவரது மறைவுக்கு திரையுலகப் பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மகேந்திரனின் உடல் பள்ளிக்கரனை அருகே உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. காலை முதலே சினிமா பிரபலங்கள் ஒருவர் பின் ஒருவராக வந்து மகேந்திரன் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், இயக்குநர் மணிரத்னம், சுஹாசினி, இசையமைப்பாளர் இசையராஜா, கவிஞர் வைரமுத்து, நடிகர்கள் மோகன், சசிகுமார், உதயநிதி, தலைவாசல் விஜய், கருணாகரன், நடிகைகள் ரேவதி, அர்ச்சனா, வரலட்சுமி, இயக்குநர்கள் பாக்யராஜ், அகத்தியன், ஷங்கர், திரு, சிம்புதேவன், சந்தானபாரதி, சஞ்சய் பாரதி உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்கள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

© Copyright 2019 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz