தேர்தல் நாள் அன்று விடுமுறை அளிக்காத தனியார் நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை: சென்னை மாவட்டத் தேர்தல் அதிகாரி எச்சரிக்கை

Tuesday 02, April 2019, 21:20:54

தேர்தல் நாள் அன்று விடுமுறை அளிக்கதா தனியார் நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி பிரகாஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வாக்குசாவடிகளுக்கு கணிணி மூலமாக சுழற்சி முறையில் வாக்கு சாவடி முகவர்களை தேர்ந்தெடுக்கும் பணி சென்னை ரிப்பன் மாளிகையில் மாவட்ட தேர்தல் அதிகாரி பிரகாஷ் முன்னிலையில் நடந்தது இதில் சென்னை மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம், தேர்தல் செலவின பார்வையாளர்கள், பொது பார்வையாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பிறகு மாவட்ட தேர்தல் அதிகாரி பிரகாஷ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

2019 நாடாளுமன்ற தேர்தல் மற்றும் பெரம்பூர் சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது வாக்காளர் பட்டியலை பொருத்தவரை 3 பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பரப்பில் 670727 புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர். இந்த வாக்காளர்கள் புதிய வாக்காளர் அல்லது இது வரை பெயர் சேர்க்காதவர்களாக இருக்கலாம்.

சென்னை மாவட்டத்தில் மக்கள் தொகையில் 77% பேர் வாக்களர்களாக உள்ளனர். எந்த எந்திரம் எந்த பூத்திற்கு செல்லும் என்பது தேர்தலுக்கு முன் நாள் வரை யாருக்கும் தெரியாது. இந்த தேர்தலில் 144 பறக்கும் படையினர் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதுவரை ஆவணம் இல்லாமல் 7-கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது, 40 கோடி அளவிலான தங்கம் பறிமுதல் செய்துள்ளார்கள்.
தேர்தல் குறித்த விளம்பரங்கள் மற்றும் சுவரொட்டிகள் குறித்து 66 புகார் பதியப்பட்டு 52 புகார் மீது முதல் தகவல் அறிக்கை பதிந்துள்ளோம்.

தேர்தல் பணியாளர்களுக்கு மூன்று கட்டமாக பயிற்சி வழங்கப்பட உள்ளது. தேர்தல் நாளன்று பொது விடுமுறை விடப்பட்டுள்ளது, அதை மீறி பள்ளிகளோ தனியார் நிறுவனங்களோ இயங்கினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.

© Copyright 2019 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz