பெண்கள் யாரும் திமுகவுக்கு வாக்களிக்கக் கூடாது - அரூரில் பாமக நிறுவனர் இராமதாஸ் பேச்சு!

Wednesday 03, April 2019, 19:33:54

அதிமுக தலைமையிலான கூட்டணியில் தர்மபுரி நாடாளுமன்ற வேட்பாளர் அன்புமணி மற்றும் அரூர் சட்டமன்ற (தனி) தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சமபத்குமார் ஆகியோரை ஆதரித்து அரூர் ரவுண்டானாவில் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் இன்று நடந்தது.

இந்தக் கூட்டத்தில் பாமக நிறுவனர் இராமதாஸ், ஜி.கே.மணி, உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

அரூரில் நடந்த தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் பாமக நிறுவனர் இராமதாஸ் பேசியபோது, இரட்டை இலையும் மாம்பழம் ஆகிய இரண்டு சின்னமே ஒன்று. இந்த ஆட்சியை யாராலும் அசைக்கமுடியாது.

தேர்தல் மேடைகளில் திமுக தலைவர் ஸ்டாலின் பேச்சு அநாகரிகமான பேச்சாக உள்ளது. அவர் துனை முதல்வரானது என்னால்தான். விவசாயிகளுக்குக் குரல் கொடுப்பதாகக் கூறி வரும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு விவசாயத்தை பற்றி எதுவுமே தெரியாது.

2006 - 2011 ஆண்டு காலத்தில் பாட்டாளி மக்கள் கட்சியால் தான் திமுகவினர் ஆட்சியில் இருந்தனர் - அதற்கு காரணம் இராமதாஸ்.

தர்மபுரி என்பது மிகவும் பின்தங்கிய மாவட்டம் - படிப்பில் முன்னேறிய மாவட்டமாக உள்ளது. பெண்கள் யாரும் திமுகவுக்கு வாக்களிக்க கூடாது.

இடைத்தேர்தல் நடக்கும் 18 தொகுதிகளில் அரூர் சட்டமன்றத் தொகுதியில் அதிக வாக்கு வித்தியாசத்தில் அதிமுகவை வெற்றிபெற வைக்கவேண்டும்.

அரசு ஊழியர்கள், ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கோரிக்கைகளை முதல்வரிடம் பேசி தீர்வு காண்பேன். ஆளும்கட்சியால் தான் அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றமுடியும் - எதிர்கட்சியால் முடியாது. இந்த தேர்தலோடு திமுக முடிவுக்கு வந்துவிட்டது என்று அவர் பேசினார்.

© Copyright 2019 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz