டிக் டாக் செயலிக்குத் தடை! - மத்திய அரசுக்கு மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு.

Thursday 04, April 2019, 08:51:34

ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் மொபைல் போனின்  இணைய செயல்பாட்டில் மிகவும் பிரபலமாக பலராலும் பார்க்கப்பட்டு வந்தது டிக் டாக் செயலி. இது மிகவும் ஆபாசமான அருவருப்பான காட்சிகளைக் கொண்டதாக இருந்தது. திரைக் காட்சிகளையோ அல்லது பாடல்களையோ அதன் ஒலிக்கு ஏற்றாற் போல  நடித்து யார் வேண்டுமானாலும் அக் காட்சியினை டிக் டாக் செயலியில் பதிவேற்றம் செய்ய முடியும்.

என்ன செய்கிறோம் என்பதே புரியாமல் ஜாலிக்காக திரைப்பட பாடல்கள் மற்றும் காட்சிகளை இளைஞர் மற்றும் யுவதிகள் நடித்து டிக் டாக்கில் ஏராளமாகப்  பதிவேற்றி வந்தனர். இந்தப் பதிவுகளுக்காகத் தங்களுக்குக் கிடைக்கும் லைக்குகளுக்காகவும், அந்த லைக்குகள் மூலம் பிரபலமடைவதன் வாயிலாகத் தங்களுக்குத் திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கும் என அவர்கள் நம்பியதே இதன் காரணம். அதற்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் எல்லைமீற அவர்கள் முன்வந்தனர்.

நடிப்பு என்ற பெயரில் தங்களது உடலுறுப்புகள் வெளிப்படும் வகையிலும், கேவலமான ஆபாச வசனங்களையும் வயது வித்தியாசமின்றி ஆண் பெண் பேதமின்றி திரைக்காட்சிகளாக நடித்து அவர்கள் பதிவேற்றி வந்தனர். தங்களது திறமையினை வெளிப்படுத்துவதில் என்ன தவறு என அவர்களால் இதற்கு நியாயமும் கற்பிக்கப்படுகிறது.

இது தவிர ஒவ்வொரு சாதியைச் சேர்ந்தவர்கள் ஒரு குழுவாகத் தங்கள் சாதிப் பெருமையை டிக் டாக் பதிவுகளாகப் போடுவது அதை விமர்சனம் செய்து இழிவாகப் பிற சாதியைச் சர்ந்தவர்கள் ஏளனமாகப் பதிவிடும் விபரீதம் பெருகியது. இதனால் சாதிமோதல்கள் தலைதூக்கும் அபாயமும் அதிகரித்தது. 

எல்லாவற்றுக்கும் மேலாக டிக் டாக் பயன்படுத்துவோர் தனி குழுக்களாக ஒவ்வொரு மாவட்டங்களிலும் சந்தித்து அளவளாவி  டிக் டாக்குக்கான காட்சிகளை படமாக்கி அவற்றைப் பத்திவேற்றி வந்தனர் இதிலும் நிறைய அத்து மீறல்கள் நடந்ததாக புகார்கள் எழுந்தன.

டிக் டாக் செயலி சமூக சீரழிவுக்கு வித்திடுவதாகவும் கலாச்சார சீர்கேட்டை உருவாக்கி இளைஞர்களுக்கு பேராபத்தை உருவாக்கி வருவதாக சமூக செயல்பாட்டாளர்களும், அரசியல் தலைவர்களும் குரல் கொடுத்து டிக் டாக் செயலியைத் தடை செய்யும்படி கோரி இருந்தனர்.

இந்த நிலையில் டிக் டாக் செயலிக்குத் தடைவிதிக்குமாறு மத்திய அரசுக்கு மதுரை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவு. பிறப்பித்தது.

அத்துடன்டிக் டாக் செயலியில் உள்ள வீடியோக்களை ஒளிபரப்பவும் தொலைக்காட்சி சேனல்களுக்கு தடை.யை சென்னை உயர் நீதிமன்றம் விதித்துள்ளது. மதுரை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவு அனைவராலும் வரவேற்கப் பட்டுள்ளது.

நல்லது நடந்தால் சரிதான்! 

© Copyright 2019 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz