அமமுக விற்கு ஆதரவு - விஸ்வகர்மா அமைப்புகளின் பேரவை அறிவிப்பு!

Friday 05, April 2019, 22:55:04

சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில், அண்ணா விஸ்வகர்மா ஐந்தொழிலாளர்கள் பேரவை சார்பாக செய்தியாளர்களை சந்தித்தனர் அப்போது பேசிய அவர்கள், வரும் பாராளுமன்றம் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் மற்றும் அதன் கூட்டணி கட்சியான எஸ்டிபிஐ கட்சியை ஆதரிப்பது என தீர்மானம் நிறைவேற்றி உள்ளதாக கூறினர்

மேலும் டிடிவி தினகரன் அவர்கள் ஐந்தொழிலாளர்களான கருமார் தச்சர் கன்னார் சிற்பி பொற்கொல்லர் இவர்களின் தொழிலில் உள்ள சிரமங்களை நன்கு உணர்ந்தவர் என்றும் ஒரு காலத்தில் கொடி கட்டிப் பறந்த விஸ்வகர்ம தொழிலாளர்கள் இன்று சராசரி வாழ்க்கைக்கே போராளிகளையும் அறிந்தவர் என்று கூறினர் தனது தேர்தல் பிரச்சாரத்தில் எங்களைப் பற்றி குறிப்பிடுவது எங்கள் மக்களுக்கு மிகுந்த உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளதாக கூறினர்

குறிப்பாக தமிழ்நாடு அனைத்து விஸ்வகர்மா அமைப்புக்களின் ஒருங்கிணைந்த பேரவை சார்பாக, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை ஆதரிப்பு ஆதரித்து வெற்றி பெறும் வெற்றி பெற செய்தது என்றும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து விஸ்வகர்மா சமுதாயம் தொழிற்சங்கங்களுக்கும் ஐந்தொழிலாளர்களும் ஒற்றுமையுடன் உழைத்து பரிசுப்பெட்டகம் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக் கொள்வதாக தெரிவித்தனர்

© Copyright 2019 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz