மோடியின் ஆட்சி சர்வாதிகார ஆட்சி முற்றிலும் அகற்றப்பட வேண்டும் - பேராயர் எஸ்ரா சற்குணம் பேட்டி

Friday 05, April 2019, 22:57:01

இந்திய சமூக நீதி இயக்கத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் தந்தை பேராயர் எஸ்ரா சற்குணம் அவர்கள் இன்று விழுப்புரம் செய்தியாளர் சந்திப்பின்போது அளித்த பேட்டி

நாட்டில் சமூக நீதி நிலை படுத்திட வேண்டும் அரசியலமைப்புச் சட்டத்தில் எந்தெந்த சமூகநீதி சட்டங்கள் கொடுக்கப்பட்டுள்ளது அவற்றையெல்லாம் முறையாக நிறைவேற்றப்பட வேண்டும்

மத்திய அரசான மோடியின் ஆட்சி சர்வாதிகார ஆட்சி முற்றிலும் அகற்றப்பட வேண்டும்

சிறுபான்மை மக்களுக்கு எதிரான ஆட்சி சிறுபான்மை மக்கள் பல வழியில் பாதிக்கப்படுகிறார்கள் சிறுபான்மை மக்கள் மட்டுமல்ல ஏழை எளிய மக்களுக்கு உதவிய தொண்டு நிறுவனங்களும் முற்றிலும் முடக்கப்பட்டு அவர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த வெளிநாட்டு பணங்கள் முற்றிலும் தடுக்கப்பட்டு நசுக்கப்பட்டு வருகின்றன

இந்தியாவின் ஒட்டுமொத்த மக்களுக்கும் எதிராக நடக்கும் பிஜேபி முற்றிலும் அகற்றப்பட வேண்டும் என்பதே இந்திய சமூக நீதியைக் இருக்கும் ஒட்டுமொத்த மக்களின் கோரிக்கை இவ்வாறு அவர் கூறினார்

© Copyright 2019 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz