திமுக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெறும் - பண்பாட்டு மக்கள் தொடர்பகம் கருத்துக் கணிப்பு

Friday 05, April 2019, 23:07:22

தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், மக்களின் மனநிலையை அறியும் பொருட்டு பல்வேறு நிறுவனங்கள் கருத்துக் கணிப்பு நடத்தி முடிவுகளை வெளிடத் தொடங்கி உள்ளன.

சென்னை நிருபர்கள் சங்கத்தில் பண்பாட்டு மக்கள் தொடர்பகத்தினர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தனர்

அப்போது பேசிய அவர்கள், பண்பாட்டு மக்கள் தொடர்பகம் நடத்திய கருத்துக் கணிப்பு முடிவு இன்று வெளியிடப்பட்டது.

பண்பாட்டு மக்கள் தொடர்பகம் கருத்துக் கணிப்பு முடிவுகள்:

18 சட்டமன்ற இடைத்தேர்தல்:

திமுக:

9 முதல் 11 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்பு.

அதிமுக:

2 முதல் 3 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்பு.

அமமுக:

3 முதல் 4 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்பு.

மொத்தமுள்ள 18 தொகுதிகளில் 2 தொகுதி முடிவுகளை கணிக்க முடியாத நிலை உள்ளது.

40 நாடாளுமன்ற தொகுதிகள்:

திமுக கூட்டணி:

தமிழகம், புதுவையில் 27 முதல் 33 மக்களவை தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்பு.

அதிமுக கூட்டணி:

3 முதல் 5 மக்களவை தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்பு.

அமமுக கூட்டணி:

1 முதல் 2 மக்களவை தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்பு.

© Copyright 2019 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz