அவசர கதியில் அஞ்சலி பேனர் தயார்!

Monday 30, July 2018, 18:14:02

சிறுநீரகத் தோற்று காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை காவேரி மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பெற்று வரும் தி.மு.க. தலைவர் கருணாநிதி குறித்து பலவிதமான வதந்திகள் கிளப்பப்பட்டு பரவி வருகின்றன.

இணையத்தில் அவரது உடல்நலம் குறித்துப் பல்வேறுவிதமான மீம்ஸ்கள் வெளியாகி வருகின்றன. அடிப்படை நாகரீகமும், மனிதாபிமானமும்  கூட இல்லாதவர்கள் வெளியிட்டுள்ள சில மீம்கள் கனடனத்துக்குரியவை என தி.மு.க. முன்னணித் தலைவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

தங்கள் தலைவர் உடல் நலம் பெற்று நல்ல நிலைமையில் மீண்டு வர வேண்டும் கட்சியினை வழி நடத்திச் செல்ல வேண்டும் என தி.மு.க. தொண்டர்கள் உணர்வு வயப்பட்டவர்களாக மருத்துவமுனையின் முன்பாக நின்று குரல் எழுப்பி வருகின்றனர்.

இந்த நிலையில் வதந்திகளை நம்பித் தங்கள் தலைவருக்காக கண்ணீர் அஞ்சலி பேனரை ரெடி செய்து விட்ட சில உடன்பிறப்புகள் அதனை என்ன செய்வதென்று தெரியாமல் மறைவாக தற்போது அதனை மறைத்து வைத்துள்ளனர். இதனை படம் எடுத்து விட்ட குறும்புக்கார்கள் சிலர் அதனைத தற்போது வாட்சப்பில் வைரலாகப் பரப்பி வருகின்றனர்.

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் படங்கள் அச்சிடப்பட்டுள்ள அந்த பேனரில் தமிழினம் காத்தத் தந்தைக்கு இதய அஞ்சலி! என்று கருப்பு சிகப்பு வண்ணங்களில் பெரிய அளவிலான எழுத்துகள் தலைப்பாக அச்சிடப்பட்டுள்ளன. அதன் கீழ்  

" அடுத்த பிறவி நீ பிறப்பாய் என்று...

தமிழக மக்கள் கனவைக் காப்பாய் என்று....

வைத்தியநாதபுரத்தின் உங்கள் பிள்ளைகள்

எதிர்பார்ப்புகளுடன் உள்ளனர்....

என்ற வரிகளும் காணப்படுகின்றன.

 

 

© Copyright 2023 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz