
தமிழக அரசாங்கத்தால் நடத்தப்பட்டு வரும் அங்கன்வாடி பள்ளிகளில் தொடக்கக் கல்விக்கு முன்பான மழலையர் வகுப்புகளான எல்.கே.ஜி, யு.கே.ஜி போன்றவை தொடங்கப்படுவதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதுவரை மாதிரிப் பள்ளிகளில் மட்டுமே இந்த வகை வகுப்புகள் நடைபெற்று வருகின்றன என பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

தற்போது முதன் முறையாக அரசு பள்ளிகளில் பிரீ.கே.ஜி., எல்.கே.ஜி, யு.கே.ஜி போன்ற மழலையர் வகுப்புகளை ஆகஸ்ட் 16ந் தேதி முதல் அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைக்கிறார்.
இதன் முதல்கட்டமாக 32 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பிரீ.கே.ஜி., எல்.கே.ஜி, யு.கே.ஜி. தொடங்கப்பட உள்ளன. அடுத்த கல்வி ஆண்டில் 35, 000 அரசு பள்ளிகளிலும் எல்.கே.ஜி., வகுப்புகள் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.