தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல் நலம் விசாரிக்க காங்கிரஸ் தலைவர் ராகுல் புது டில்லியிலிருந்து கிளம்பி இன்று சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில் அவரைத் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் வரவேற்றனர். பிறகு காவேரி மருத்துவனைக்கு சென்ற ராகுல் தி.மு.க. செயல் தலைவரும், கருணாநிதியின் மகனுமான ஸ்டாலின், கருணாநிதியின் மகளும் முன்னாள் எம்.பி. கனிமொழி ஆகியோரைச் சந்தித்துப் பேசினார்.
பின்னர் அவர் கருணாநிதி சிகிச்சை பெற்று வரும் வார்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவரது வருகையினை ஸ்டாலின் கருணாநிதியின் காதருகே சென்று கூறிய போதிலும் கருணாநிதிஇடமிருந்து எந்தவிதமான அசைவும் இல்லை. தமிழக மக்களின் உறுதி கருணாநிதியினை பலம் கொள்ள வைத்துள்ளது என்ற ராகுல் கருணாநிதி விரைவில் குணமடையத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்து கிளம்பிச் சென்றார்.