
உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து சென்னை காவேரி மருத்துவமனையில் கடந்த பத்து நாட்களாகத் தீவிர கண்காணிப்புப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நிலை தேறிவருவதாகக் கூறப்பட்டது.
இந்நிலையில் இன்று மாலையில் கருணாநிதி உடல்நிலை குறித்து சென்னை காவேரி மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவருடைய உடல்நிலையில் மீண்டும் பின்னடைவு ஏற்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளது.

அந்த அறிக்கையில் வயது மூப்பு காரணமாக கருணாநிதியின் உறுப்பு செயல்பாட்டில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்கு பின்பே கருணாநிதி உடல்நிலை குறித்து தெரியவரும் என்று காவேரி மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதையடுத்து காவேரி மருத்துவமனைக்கு மு.க.ஸ்டாலின், மு.க.அழகிரி, கனிமொழி உள்ளிட்டோர் வந்துள்ளனர். மருத்துவமனை வளாகத்தில் கவலை தோய்ந்த முகங்களுடன் தி.மு.க.தொண்டர்களைக் காண முடிகிறது.