
ஏறத்தாழ ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு வைகை அணையின் நீர்மட்டம் 66 அடியினைத் தற்போது எட்டியுள்ளது.
வைகை அணையிலிருந்து பாசனத்திற்காக வரும் 20-ம் தேதி முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்..
இதன் மூலம் மதுரை, திண்டுக்கல் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் 1 லட்சத்து 5,002 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்றும் முதல்வர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மதுரை, திண்டுக்கல் மற்றும் சிவகங்கை மாவட்டத்து விவசாயிகள் வைகை அணை நீர் திறப்பினை ஆவலோடு எதிர்நோக்கிக் காத்துள்ளனர்.