திருப்பதியில் இருந்து சேலத்திற்கு செல்லும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தருமபுரி மாவட்டத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் மாவட்ட ஆட்சித்தலைவர் மலர்விழி . மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பண்டி கங்காதர் உள்ளிட்டோர் பூங்கொத்து வழங்கிச் சிறப்பான வரவேற்பினைஅளித்தனர்.
காரிமங்கலத்தில் அமைக்கப்பட்டு இருந்த மேடையில் ஏறி நின்ற தமிழக முதல்வர் நூற்றுக்கணககில் அதிமுக நிர்வாகிகள், கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் வழங்கிய சால்வைகளை அன்புடன் ஏற்றுகொண்டார்.
பிறகு, காரிமங்கலத்தில் இருந்து சேலத்துக்குப் பலத்த போலிஸ் பாதுகாப்புடன் புறப்பட்டு சென்றார்.