
திருச்சி சுப்பிரமணியபுரத்தில் மாநகர் அதிமுக மாவட்ட ஆபீஸ் எதிரே அதிமுக சார்பில் பல்வேறு சந்தர்ப்பங்களில் வைக்கப்பட்ட பல்வேறு பேனர்கள் நீண்ட நாட்களாக அப்புறப்படுத்தாமல் அப்படியே விடப்பட்டிருந்தது.
ஆளுங்கட்சியினர் வைத்த அந்த பேனர்கள் அதை போலீசும் கண்டு கொள்ளவில்லை. மாநகராட்சியோ அவற்றை அகற்றுவது குறித்து எந்த வித அக்கறையும் எடுத்துக் கொள்ளவில்லை.
சுப்பிரமணியபுரத்தில் வசிக்கும் சிலர் சென்னையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் டிராபிக் இராமசாமியினைத் தொடர்பு கொண்டு இந்த விவகாரம் குறித்து எடுத்துக் கூறித் தங்களுக்கு உதவும்படி கேட்டுக் கொடுள்ளனர்.

இந்த நிலையில் திருச்சியில் சில நிகழ்சிகளில் பங்கேற்பதற்காக ஒப்புக் கொண்டிருந்த டிராபிக் ராமசாமி அதற்காக இன்று காலையில் திருச்சி வந்து சேர்ந்தார்.
திருச்சி வந்த அவர் நேரே சுப்பிரமணியபுரம் பகுதிக்கு வந்து அங்கு வைக்கப்பட்டிருந்த அ.தி.மு.க. பேனர்களை அகற்றும் முயற்சியில் இறங்கினார். இந்தத் தகவலை அறிந்து மாநகராட்சி அதிகாரிகளும் போலீசும் அங்கு வந்து சேர்ந்தனர்.
அதிகாரிகள் தன்னிடம் நடத்திய பேச்சுவார்த்தையினை ஏற்காத இராமசாமி அங்கிருந்த விளம்பர பேனரகளை அகற்றத் தொடங்கினார். இதற்கு எதிர்ப்புத் தெர்வித்து அ.தி.மு.க.வினர் கூச்சலிட அங்கு பெரும் பரபரப்பேற்பட்டது. பின்னர் அங்கு குவிக்கப்பட்ட போலீசார் வேறு வழியின்றி பேனர்களை அகற்றி வருகின்றனர்.