சென்னையில் பா.ஜ.க.வினர் ஏற்பாடு செய்துள்ள பிரதமர் நரேந்திரமோடியின் பிறந்தநாள் நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்வதற்காக மோடியின் இளைய சகோதரர் பிரகலாத்மோடி நேற்றிரவு சென்னை வந்தார்.
கிண்டி ராஜ்பவனில் தங்கியிருந்த அவரை தமிழ்நாடு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேசினார். ஓ.பன்னீர் செல்வத்தின் இந்த திடீர் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், சில முக்கிய பிரமுகர்களும் அவரைச் சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது. நேற்று இரவு பிரகலாத் மோடி திருப்பதி புறப்பட்டு சென்றார்.
மோடி பிறந்த நாளையொட்டி பிரகலாத் மோடி இன்று அதிகாலையில் திருப்பதியில் சிறப்பு வழிபாடு நடத்தி சாமி தரிசனம் செய்தார். இன்று மதியம் தாம்பரத்தில் கட்சி நிர்வாகிகள் ஏற்பாடு செய்துள்ள மருத்துவ முகாம், இரத்ததான முகாம் போன்ற பொது நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்கிறார்.