
சேலம் அருகே நரசோதிப்பட்டி பகுதியில் உள்ள தனியார் கல்குவாரியில் உள்ள குட்டையை துவைப்பது, குளிப்பது போன்ற தங்களது தேவைகளுக்காக அந்தப் பகுதில் உள்ளவர்கள் பயன்படுத்தி வந்தனர்.
சேலம் ராமகிருஷ்ணா மேனிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பில் பயின்று வரும் நரசோதிப் பட்டியைச் சேர்ந்த மாணவர்களான கௌசிக், மாரிமுத்து ஆகியோர் நேற்று ஞாயிற்றுக்கிழமை குளிப்பதற்காக் கல்குவாரியில் உள்ள குட்டைக்குத் தங்களது நண்பர்களுடன் சென்றுள்ளனர்.
குட்டையில் நீச்சலடித்து இறங்கிய அவர்கள் இருவரும் ஆழமான பகுதி என்பதை அறியாமல் சிக்கிக் கொண்டு அதில் வெளிவர முடியாமல் பரிதாபமாக மூழ்கி மூச்சுத் திணறி இறந்தனர்.
இது பற்றித் தகவலறிந்த போலீசார் உயிரிழந்த 2 மாணவர்களின் உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.