சிவகாசி அருகே உரிய அனுமதியின்றி குடோன் ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1 கோடி ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் இன்று வருவாய்த் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டன. தீபாவளி நெருங்கும் நேரத்தில் இந்த அதிரடி நடவடிக்கை இது போன்ற முறைகேடுகளில் ஈடுபடும் பட்டாசு வணிகர்களுக்குப் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
சிவகாசி அருகே கண்ணா நகரில் அருண்குமார் என்பவருக்கு சொந்தமான பட்டாசு கடைக்கு அருகே குடோன் அமைத்து உரிய அனுமதியின்றி அதில் பட்டாசுகலைப் பதுக்கி வைத்துள்ளதாக வருவாய்த் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்தத் தகவலின் அடிப்படையில் வட்டாட்சியர் பரமானந்தராஜா தலைமையிலான வருவாய்த் துறையினர் கண்ணா நகரில் சோதனையினை மேற்கொண்டனர்.
அருண்குமாருக்குச் சொந்தமான குடோனில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். முறைப்படி எந்த விதமான அனுமதியினையும் பெறாமல் அந்தக் குடோன் அமைக்கப்பட்டுள்ளது என்பது தெரிய வந்தது. குடோனுக்குள் 1 கோடி மதிப்பிலான பட்டாசுகள் பதுக்கி வைக்கப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து பதுக்கி வைக்கப்பட்ட ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான பட்டாசுகளை பறிமுதல் செய்ததோடு அந்த குடோனிற்கு வருவாய் துறையினர் சீல் வைத்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள சிவகாசி கிழக்கு காவல் நிலைய போலீசார் வட்டாட்சியர் பறிந்துரையின் பேரில் குடோன் உரிடையாளர் அருண்குமாரை கைது செய்து விசாரனை நடத்தி வருகின்றனர