வரும் 14-ல் திருச்சி மாவட்ட திமுகவின் செயற்குழு கூட்டம்; கே.என்.நேரு அழைப்பு

Wednesday 12, September 2018, 16:31:50

திருச்சி மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் வரும் வரும் 14-ம் தேதி திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நடக்கிறது. இந் நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட திமுகவின் நிர்வாகிகள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என முன்னாள் அமைச்சரும், தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான கே.என்.நேரு மற்றும் வடக்கு மாவட்ட செயலாளர் தியாகராஜன் ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

திருச்சி மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் வரும் 14-ம் தேதி காலை 9 மணிக்கு திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நடக்கிறது. மாவட்ட அவைத்தலைவர்கள் பேரூர் தர்மலிங்கம், அம்பிகாபதி ஆகியோர் தலைமை வகிக்கின்றனர். இக் கூட்டத்தில் மாவட்ட, மாநகர நிர்வாகிகள், முன்னாள், இந்நாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், அனைத்து ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் கழக செயலாளர்கள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், மாவட்ட பிரதிநிதிகள், கழக முன்னோடிகள் உள்ளிட்ட அனைவரும் தவறாது பங்கேற்று சிறப்பிக்க வேண்டும்.

விழுப்புரத்தில் வரும் 15-ம் தேதி நடக்கும் முப்பெரும் விழா, 18-ம் தேதி ஊழல் அதிமுக அரசை கண்டித்து நடக்கும் கண்டன ஆர்ப்பாட்டம், கழக ஆக்கப்பணிகள் ஆகியவை குறித்து ஆலோசிக்க இக் கூட்டம் நடக்கிறது.

மேற்கண்டவாறு அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருந்தனர்.

© Copyright 2025 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz