மணல் கடத்தல் லாரியை விடுவிக்க லஞ்சம் கேட்டு பேரம் பேசிய காவல் அதிகாரிகள் அடியோடு டிஸ்மிஸ்!

Saturday 07, September 2019, 19:29:39

மணல் கடத்தலில் ஈடுபட்ட லாரியை விடுவிக்க லஞ்சம் கேட்டு பேரம் பேசியதாக கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி காவல்நிலைய பெண் காவல் ஆய்வாளர் வனிதாராணி , உதவி காவல் ஆய்வாளர் செந்தில்வேல், தலைமை காவலர்கள் இருவர் என மொத்தம் நான்கு பேரை நிரந்தரப் பணி நீக்கம் செய்து தமிழக டிஜிபி திரிபாதி ஐபிஎஸ் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

டிஸ்மிஸ் செய்யப்பட பெண் காவல் ஆய்வாளர் வனிதாராணி குமரி மாவட்ட ஆரல்வாய்மொழி காவல் நிலைய ஆய்வாளராகப் பணியாற்றியவர் கேனில் டீசல் கேட்டு தர மறுத்த தொழிலாளியை (முதியவர்) அடித்து உதைத்ததாக அங்கு இவர் மீது வழக்கும் உண்டு.

© Copyright 2020 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz