உள்ளாட்சித் தேர்தலுக்கானப் பணிகள் தொடக்கம்.

Friday 13, September 2019, 19:22:38

கடந்த 3 ஆண்டுகளாக தமிழகத்தில் நடைபெறாமல் தள்ளிப் போடப்பட்டிருந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் விரைவில் நடத்தப்பட உள்ளன. இந்தத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை தேர்தல் ஆணையம் முடுக்கி விட்டுள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் மூலம்  தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளின் பதவிக் காலம் முடிந்து கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் ஆகியுள்ளன. மூன்றாண்டுகளுக்கு முன்பே நடத்தப்பட்டிருக்க வேண்டிய உள்ளாட்சி நிர்வாகிகளுக்கான தேர்தலை இன்னும் நடத்தாமல் தமிழக அரசு காலம் தாழ்த்தி வருகிறது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் இல்லாத காரணத்தால் உள்ளாட்சிப் பணிகள் நடக்காமல் வெகுவாக முடங்கியுள்ளன. இது தொடர்பான வழக்குகளில் தேர்தல் ஆணையம் வரும் அக்டோபர் இறுதிக்குள் தேர்தல் தேதி அறிவித்துவிடுவோம் எனத் தெரிவித்திருந்தது.

இந்த நிலைமையில் தேர்தல் ஆணையம் இப்போது தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிகளை பூர்வாங்கப் பணிகளைத் தொடங்கியுள்ளது.தேர்தலுக்கு தேவையான வண்ண வாக்குச்சீட்டுகளை கொள்முதல் செய்யடெண்டர் அறிவித்துள்ளது.

இதன்படி உள்ளாட்சித் தேர்தலுக்காக வெளிர் நீல வாக்குச் சீட்டுகள், இளம் சிவப்பு நிற வாக்குச் சீட்டுகள், வாக்குச் சீட்டு காகிதங்கள் எனப் பல்வேறு ரகங்களில் காகிதங்களை பல நூறு டன்களில்  கொள்முதல் செய்யும் பணிகள் தொடங்கியுள்ளன. இதனால் வெகு விரைவில் உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகலாம் எனத் தெரிகிறது

© Copyright 2020 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz