ஏற்காடு பா.ஜ.க. ஒன்றிய துணைத் தலைவர் வெட்டிக்கொலை!

Monday 16, September 2019, 19:25:13

சேலம் மாவட்டம் ஏற்காடு ஒன்றிய பா.ஜ.க துணைத்தலைவர் சின்ராஜ் இன்று  மர்ம நபர்கள் சிலரால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். சின்ராஜ் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஏற்காட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் ஏற்காடு ஒன்றிய பா.ஜ.க துணைத்தலைவராக இருந்தவர் சின்ராஜ். இவர் இன்று அவரது சொந்த ஊரான கொழகூர் பகுதியில் உள்ள டீக்கடையில் நின்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த மர்ம நபர்கள் அவரை வெட்டிப் படுகொலை செய்து விட்டு தப்பி சென்றனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

© Copyright 2020 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz