“மணல் கடத்தலில் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்காததற்கு மேலிட நிர்ப்பந்தமே காரணம்” - புதுக்கோட்டையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் பேட்டி.

Tuesday 17, September 2019, 17:14:44

புதுக்கோட்டையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

“தமிழகத்தில் மணல் கொள்ளை தொடர்ந்து நடந்து வருகிறது. குறிப்பாக, புதுக்கோட்டை மாவட்டத்தில் வெள்ளாறு, குண்டாறு ஆகிய பகுதிகளில் தினசரி மணல் அதிகப்படியாக முறைகேடாக எடுத்துச் செல்லப்பட்டுக் கொண்டுள்ளது.

விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டத்தில் தொடர்ந்து இது குறித்து விவசாயிகள் பேசி மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு வருகிறார்கள். ஆனாலும் அது குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை.

இவ்வாறு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு   அவர்களுக்கு மேலிடத்தில் ஏற்பட்டிருந்த நிர்ப்பந்தம் கூட காரணமாக இருக்கலாம் என்று கருதுகிறேன். இதனால், கடைமடைப் பகுதிகளுக்கு நீர்வரத்து முறையாக வருவதில்லை. எத்தன காரணமாக விவசாயம் பொய்த்துப் போய் உள்ளது.

எடப்பாடி பழனிச்சாமி வெளிநாடு சுற்றுப்பயணம் குறித்து ஸ்டாலின்  விமர்சனம்  செய்ததையும் அதற்கு ஓபிஎஸ் ஏற்கனவே திமுக ஆட்சியில் ஸ்டாலின் வெளிநாடு பயணம் செய்து கூவம் ஆற்றை சுத்தப்படுத்தப்படுத்த போவதாகக் கூறியிருந்தார்; இதுவரை நடக்கவில்லை என்று பதில் கூறியிருந்தார்.  

மக்கள் பிரச்னையில் இவர்கள் இப்படிப் பேசிக்கொள்வது சிறுபிள்ளைத்தனமாக உள்ளது. அவர்கள் செய்யாததை இவர்கள் செய்யட்டும். போட்டி போட்டுக்கொண்டு விளையாட்டுத்தனமாக பேசிக் கொள்ள வேண்டாம்” என்று தனது பேட்டியில் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

© Copyright 2020 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz