தூத்துக்குடி: பட்டப்பகலில் கல்லூரி மாணவன் வெட்டிக்கொலை.

Monday 23, September 2019, 19:33:50

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் வட்டம் செய்துங்கநல்லூரில் உள்ள தனியார் கல்லூரி மாணவரான அபிமணி, இன்று மதியம் மர்ம நபர்கள் சிலரால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூர் சந்தையடியூர் தெருவைச்சேர்ந்தவர் தமிழ்ச்செல்வனின் இருபது வயது மகன் அபிமணி செய்துங்கநல்லூரில் உள்ள தனியார் கல்லூரியில் மெக்கானிக் வகுப்பில் 3வது ஆண்டு பயின்று வருகிறார்.

இன்று வழக்கம் போல் மதிய உணவிற்காக அருகில் உள்ள தனது வீட்டிற்கு பைக்கில் திரும்பி கொண்டிருந்தார். அப்போது செய்துங்கநல்லூர் ரயில்நிலையம் அருகே வந்த போது 2 க்கும் மேற்பட்ட பைக்கில் வந்த 5க்கும் ஹெல்மெட் அணிந்து வந்த கும்பல் அரிவாளுடன் இவரை துரத்தியது.

இதில் அதிர்ச்சியடைந்த அபிமணி பயந்து ஓடினார். ஆனாலும் விடாமல் அந்த கும்பல் அவரை துரத்தி சரமாரியாக அரிவாளால் வெட்டியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதன்பின்னர் அந்த கும்பல் தப்பியோடியது.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு செய்துங்கநல்லூர் போலீசார் மற்றும் ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி சுரேஷ்குமார் ஆகியோர் வந்து கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் விசாரனை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் கல்லூரி மாணவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

© Copyright 2019 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz