அண்ணாவின் 110-வது பிறந்தநாள்: கே.என்.நேரு அண்ணாசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

Saturday 15, September 2018, 13:30:59

பேரறிஞர் அண்ணாவின் 110 வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று காலை திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு முதலாவதாக திமுக மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பேரறிஞர் அண்ணாவின் 110-வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் உற்சாகமாக அரசியல் கட்சியினர், பொதுமக்கள், எழுத்தாளர்கள் என பலராலும் கொண்டாடப்பட்டு வருகின்றது. இதையொட்டி திருச்சி அண்ணாசிலையில் இன்று காலை முதலே அரசியல் கட்சியினரும், தொண்டர்களும், பொதுமக்களும் திரண்டுள்ளனர்.

இன்று காலை 9 மணியளவில் அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்வில் முதலாவதாக திமுக சார்பில் திருச்சி தி.மு.க. மாவட்டச் செயலாளரும், மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான கே.என்.நேரு தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்த நிகழ்வில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திமுகவினரும், முன்னாள், இன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாநகராட்சி துணை மேயர், முன்னாள் மாநகராட்சி உறுப்பினர்கள், மாவட்ட பிரதிநிதிகள், மகளிர் அணியினர் என பலரும் திரளாக கலந்துக்கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

© Copyright 2020 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz