சேலம் பரபரப்பு: கார் செட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் இருவர்  சடலமாக மீட்பு.

Thursday 10, October 2019, 18:47:27

சேலம் செவ்வாய்ப்பேட்டை பகுதியைச் சேர்ந்த வெள்ளி வியாபாரியான கோபி என்பவரின் மகன் சுரேஷ் சேலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். அத்துடன்  தன் தந்தையுடன் சேர்ந்து வெள்ளி கொலுசு தயாரிப்புத் தொழிலையும் பார்த்து வருகிறார் . 

நேற்று பிற்பகல் வீட்டிலிருந்து வெளியேறிய சுரேஷ் இரவு நெடுநேரம் வரை வீடு திரும்பவில்லை. இதையடுத்து சுரேஷின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் அவரது பெற்றோர்கள் தேடிப் பார்த்தும் சுரேஷ் காணவில்லை.

இந் நிலையில் சேலம் மாநகர பகுதியான குகை ,திருச்சி பிரதான சாலை அருகே கோபிக்குச் சொந்தமான கார் செட் ஒன்று உள்ளது அந்த கார் ஷெட்டுக்கு முன்பு சுரேஷின் இருசக்கர வாகனம் ஒன்று நீண்ட நேரமாக நின்றுள்ளது

இரவு 11 மணி ஆகியும் அந்த வாகனத்தை யாரும் எடுத்துச் செல்லாத நிலையில் அங்கேயே நிற்பதைக் கண்டு சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் கார் செட்டை திறந்து பார்த்துள்ளனர். செட்டுக்குள்  நின்றிருந்த காரில் ஒரு ஆணும் பெண்ணும் ஆடைகள் கலைந்த நிலையில் பிணமாகக் கிடந்ததைக் கண்டு திடுக்கிட்ட பொதுமக்கள் உடனடியாகப் போலீசுக்குத் தகவல் தந்தனர்.  

காருக்குள் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட ஆண், காணாமற் போனதாகத் தேடப்பட்டு வந்த சுரேஷ் என்பது தெரிய வர அவரது பெற்றோர் சம்பவ இடத்துக்கு அலறியடித்துக் கொண்டு வந்தனர்.  சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் . காரில் சடலமாக கிடந்த சுரேஷ் மற்றும் பெண் ஆகியோரது சடலத்தைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

முதற்கட்ட விசாரணையில் சுரேஷ் உடன் பிணமாகக் கண்டெடுக்கப்பட்ட  பெண் சேலம் குகை பகுதியைச் சேர்ந்த வெள்ளி வியாபாரியான ரவி என்பவரின் மகள் ஜோதிகா என தெரியவந்தது. ஐவரும் சேலத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வந்தார்.

சுரேஷும்  ஜோதிகாவும் காதலித்து வந்ததாகவும் இதற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இருவரும் காரில் பிணமாகக் கண்டேடுக்கப்பட்டுள்ளனர்.

சாகும் முடிவெடுத்து இறுதியாக உல்லாசமாக இருந்து பின் தற்கொலை செய்து கொண்டார்களா அல்லது காரின் உல்லாசமாக இருந்தபோது மூச்சடைத்து உயிரிழந்தனரா? என பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த  சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

© Copyright 2020 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz