கலாம் கோவிலில் பிறந்த நாள் கொண்டாட்டம்

Tuesday 15, October 2019, 17:49:25

இந்திய விஞ்ஞான வளர்ச்சியின் தந்தை, இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர், இளைஞர்களின் எழுச்சி நாயகன் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் பிறந்தநாள் இன்று நாடெங்கும் கொண்டாடப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் திருச்சியில் அவரது மார்பளவு சிலைக்கு மாணவர்கள் மாலை அணிவித்து அவரின் நினைவு கூர்ந்து அங்கே உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

kalam3
திருச்சி தூய வளனார் கல்லூரியில் படித்தவரும், 1999-ம் ஆண்டு பொக்ரான் அணு ஆயுத சோதனையில் முக்கியப் பங்காற்றியவருமான டாக்டர் அப்துல் கலாம் கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூலை 27-ஆம் நாள் ஷில்லாங்கில் உள்ள கல்லூரியில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது மயங்கி விழுந்து மறைந்தார். உயிர் பிரியும் தருவாயிலும் மாணவர்களிடம் உரையாற்றினார்.

இளைஞர்களின் கனவு நாயகனாக திகழும் அப்துல்கலாமிற்கு திருச்சியில் சூரிய மின்சாரம் தயாரிக்கும் தொழில் நிறுவனம் நடத்தி வரும் புஷ்பராஜ் ஏபிஜே அப்துல் கலாமிற்கு தனது அலுவலகம் முன்பு 2016-ம் ஆண்டு மார்பளவு சிலை வைத்து கலாம் 2020 கனவு காணுங்கள் ஆனால் கனவு என்பது நீ தூக்கத்தில் காண்பது அல்ல உன்னத் தூங்கவிடாமல் பண்ணுவது எதுவோ அதுவே ( இலட்சிய) கனவு என கல்வெட்டு அமைத்து கோவில் கட்டி வழிபாடு செய்து வருகிறார்.

kalam temple

ஏபிஜே அப்துல்கலாம் பிறந்த நாளை முன்னிட்டு இன்று காலை அங்கு சென்ற மாணவர்கள் கலாம் சிலைக்கு மாலை அணிவித்து வழிபாடு செய்து கனவு நாயகன் கனவு நிஜமாகும் வரை அனைவரும் உழைப்போம் என உறுதிமொழி ஏற்றார்கள்.
நிகழ்ச்சியில் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் விஜயகுமார் , உதயகுமார், வீரமணி, நாகராஜ், ஜெசி, அமர், மாதேஷ், கவிராஜ், பிரகாஷ், சண்முகப்ரியா உட்பட பலரும் பங்கேற்றார்கள்.

© Copyright 2020 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz